கருணாநிதி கைது அன்று ஜெ வீட்டில் நடந்த சண்டை! போட்டு உடைத்த தோழி!
சென்னை: மு.கருணாநிதியைக் கைது செய்ததற்காக நேரடியாக ஜெயலலிதாவிடம் சண்டை போட்டேன் என்று எழுத்தாளர் இந்துமதி தெரிவித்திருக்கிறார்.
தமிழ் வார இதழ்களைப் படித்து வளர்ந்த தலைமுறைக்கு எழுத்தாளர் இந்துமதி பற்றி அறிமுகம் தேவை இல்லை. அவர் பிரபலமான வெகுஜன எழுத்தாளர். நிறைய தொடர் கதைகள், சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.

இது பழைய தலைமுறை அறிந்த செய்தி. இன்றைய இண்டர்நெட் குழந்தைகளுக்குச் சமீபத்தில் சென்னையே வெள்ளத்தில் மூழ்கிய போது இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பற்றி எழுதிய பதிவு வைரலாக பரவியது. அது பலரது கவனத்தை ஈர்த்ததைவிடச் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி. அதேபோல் மு.கருணாநிதியிடமும் நன்கு பழகியவர். ஜானகி, எம்.ஜி.ஆர் எனப் பல முக்கியமான தலைவர்களுடன் பழகியவர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரே சமயத்தில் ஜெயலலிதா, கருணாநிதி நட்பு பட்டியலிலிருந்திருக்கிறார். அவர் ஒரு யூடியூப்க்கு அளித்த பேட்டியில் பல நினைவுகளைப் பேசி இருக்கிறார். அந்தப் பேட்டி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

குறிப்பாகக் கருணாநிதி கைது அன்று அவர் ஜெயலலிதா வீட்டுக்குப் போய் சண்டை போட்டதாகக் கூறியுள்ள தகவல்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
கருணாநிதியின் கைது போது நடந்தது என்ன? அவரே பேசி இருக்கிறார் படியுங்கள்.
"சசிகலாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார் ஜெயலலிதா. அன்று ஜெயலலிதா எனக்கு போன் பண்ணினார். உடனே நான் அவருக்காக சாய்பாபா சத்சரிதம் புத்தகத்தையும் Jonathan Livingston Seagull:A Story என்ற புத்தம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொண்டு சென்றேன்.
அவரைப் பார்த்துக் கொடுத்தேன். 'இந்தப் பாபா புத்தகத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தைரியத்திற்கு ஒன்று குறைச்சல் இல்லை. உங்களுக்கு என்ன குறை? உங்கள் வேலைகளை நீங்களே இனிமேல் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு அதுவே நீண்ட காலத்திற்கு உதவும்' என்று சொன்னேன்.
அதற்கு ஜெயலலிதா, 'ஆமாம். இனிமேல் நான் அப்படித்தான் இருக்கப் போகிறேன்' என்று ஆவேசமாகப் பேசினார். நானும் இனிமேல் அவர் வரமாட்டார் என நம்பினேன். நான் மட்டுமல்ல; ஒவ்வொருவரும் நம்பினார்கள். ஆனால், அவர் என்னிடம் வாக்குறுதி தந்த மூன்றாவது நாள் சசிகலாவைத் திரும்ப வீட்டுக்கு அழைத்துக் கொண்டார்.

ஜெயலலிதாவுக்கு ஒரு ஆளின் துணை தேவைப்பட்டது. அவரது வேலைகளைக் கவனித்துக் கொள்ள அவருக்கு நம்பிக்கையான ஆள் தேவையாக இருந்தது. அவரது கூடவே 24 மணிநேரமும் இருக்கக் கூடிய துணை அவருக்குத் தேவைப்பட்டது.
எனக்கு ஜெயலலிதாவைப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவர் எனக்கு நெருக்கமான தோழியாக இருந்தார். அப்போது அவர் என்னைக் கூட முழு நேரம் அவரது வீட்டுக்கே வந்துவிடச் சொன்னார்.
ஆனால், நான் முடியாது எனச் சொல்லிவிட்டேன். எனக்கு என்று குடும்பம் இருந்தது. எனக்குப் பிள்ளைகள் இருந்தனர். அவர்களை நானே கவனிக்க வேண்டி இருந்தது. ஆகவே அவரது அழைப்பை ஏற்க முடியாது எனச் சொல்லிவிட்டேன்.
'உங்களோடு அரசியலைப் பற்றியோ கட்சியைப் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. நான் உங்களது அபிமானி. உங்களின் ஆத்மார்த்தமான சினேகிதி நான். இதுதான் என்னால் முடியும். ஊர் ஊராக உங்களுடன் நான் வாகனத்தில் வர முடியாது. 24 மணிநேரமும் இங்கேயே இருக்க முடியாது' என்று அவரிடம் சொன்னேன்.
ஜெயலலிதா வீட்டில் பிரேமா நரசிம்மன் என்று ஒரு பியூட்டிஷியன் இருந்தார். அவர் கொஞ்ச நாள் ஜெயலலிதாவுடன் பிரச்சாரத்தின் போது சென்றார். அவராலும் அதைத் தொடர முடியவில்லை.
அவருடன் செல்லவும், அவருடன் கூடவே இருக்கவும் நிச்சயமாக ஒரு ஆள் தேவை. அந்தத் தேவையை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை.

ஜெயலலிதா ஒரு சிங்கம். அவர் எழுந்து நின்றால் சிங்கம் போல் இருப்பார். அவரது பிறந்தநாள் அட்டையில் ஒவ்வொரு ஆண்டும் எழுந்து நிற்பதைப் போன்ற சிங்கத்தின் படத்தைத்தான் அவர் அச்சிடுவார்.
ஆரம்பக் காலத்தில் நான் பார்த்த ஜெயலலிதா முற்றிலும் வேறு மாதிரியானவர். அந்த ஜெயலலிதா அப்பாவியானவர். அப்படித்தான் அவரை நான் பார்த்தேன். காற்றில் ஆடினால் அறுந்துவிடும் அளவுக்கு மெலிதாக உள்ள தங்கச் சங்கிலிக்குக் கூட அவர் ஆசைப்படமாட்டார். தங்கநகைகளை அணிய மாட்டார்.
அவரது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் தங்கம், வைரம் என்று பல பரிசுப் பொருள்கள் வந்து குவியும். அதை எல்லாம் என்னிடம் காட்டி இருக்கிறார். ஆனால், அதைப் போடமாட்டார். எம்.ஜி.ஆர் கொடுத்த பரிசுகளே அவ்வளவு இருக்கும். அதை அவர் அணியமாட்டார்.
அப்படிப்பட்ட ஜெயலலிதா, பின்னால் அரசியலுக்கு வந்த பிறகு ஒட்டியாணம், நெக்லஸ் என மாட்டிக் கொண்டு நின்றார். அதைப் பார்த்த போது நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். நான் பார்த்த அதே பெண்தானா இவர்? என்று சந்தேகம் வந்தது.
சென்னைக்கு ஒருமுறை மிருணாள் சென் வந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு போய் 'அவள் அப்படித்தான்' பார்த்தேன். அவர், 'நான் ஸ்ரீப்ரியாவை பார்க்க வேண்டும்' என்று சொன்னார். மறுநாள் ஸ்ரீப்ரியா படம் ஷுட்டிங் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்துக் கொண்டு சென்றேன்.
தூரத்திலிருந்தே அவர் ஸ்ரீப்ரியாவைப் பார்த்துவிட்டு, 'இவர்தான் அந்தப் படத்தின் நாயகியா?' என்று கேட்டார். ஆமாம் வாங்கப் போய் பார்க்கலாம் என்றேன். அவர், 'வேண்டவே வேண்டாம்.

ஸ்ரீப்ரியா வேறு மாதிரியான ஸ்டைல் உடையில் இருக்கிறார். அவரை நாம் பார்க்க வேண்டாம். என் மனதில் 'அவள் அப்படித்தான்' தோற்றத்திலேயே இருந்துவிடட்டும். அதைக் கலைக்க வேண்டாம்' என்று சொன்னார்.
அவர் சொன்ன விசயம் தான் ஜெயலலிதா பற்றி நினைக்கும் போது எனக்கும் தோன்றும். நான் அந்தப் பழைய ஜெயலலிதாவைத்தான் மனதில் பதியவைக்க விரும்புகிறேன்.
கலைஞரை ஒருமுறை ஜெயலலிதா கைது செய்திருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நான் போய் அவரைப் பார்த்தேன். அவர் தன் கைகளைக் காட்டினார். காவல்துறையினர் அவரை பலவந்தமாக இழுத்ததால் அவரது கைகள் கண்ணிப் போய் இருந்தது. அதைப் பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது.
அங்கிருந்து நேராக போயஸ் கார்டன் வந்தேன். போய் ஜெயலலிதாவைச் சந்தித்தேன். அவர், 'நீ எங்க போயிட்டு வருகிறாய் என்று எனக்குத் தெரியும்?' என்றார். 'ஆமாம். நான் அங்குதான் போய்விட்டு வருகிறேன்' என்றேன்.
உடனே நான், 'நீங்க செய்தது நல்லா இருக்கா? செய்யலாமா அப்படி? அவர் இருதய நோயாளி என்று தெரியும் இல்லையா? அவரை அப்படித் தூக்கிப் பந்தாடலாமா? I know what you are going to tell me and I should not see you hereafter என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்" என்று பேசியுள்ளார்.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications