Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யூடியூபர் இர்ஃபான் மீது வன்மமா? 'தவறான நபர்கள் சரியான இடத்தில்'.. விஜே பார்வதி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரமலான் பண்டிகையின் போது உதவிகள் வழங்கிய போது யூடியூபர் இர்ஃபான் நடந்து கொண்ட விதத்தை சமூக ஊடக பிரபலமான விஜே பார்வதி அண்மையில் வீடியோ வெளியிட்டு கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து விஜே பார்வதிக்கு இர்ஃபான் மீது வன்மம் இருக்கிறது என்றும்... அதனால் இப்படி பேசியதாக குற்றம்சாட்டினார்கள். வன்மத்துடன் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு விஜே பார்வதி தற்போது வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

யூடியூபர் இர்ஃபான் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். கார் விபத்து, வெளிநாட்டிற்கு சென்று தனது குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டு சமூகவலைதளத்தில் வெளியிட்டது, மனைவியின் தொப்புள் கொடியை வெட்டி அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டது எனஅடுத்தடுத்து யூடியூபர் இர்ஃபான் சர்ச்சையில் சிக்கினார்.

Wrong Person at the Right Place VJ Parvathy reacts over youtuber irfan video controversy

யூடியூபர் இர்ஃபான்

அண்மையில் யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியுடன் காரில் சென்று ரமலான் பண்டிகை அன்று ஏழைகளுக்கு உணவு உடை உள்ளிட்டவற்றை உதவியாக வழங்கினார். அப்போது ஒவ்வொரு பகுதியாக சென்று ஏழைகளை சந்தித்து உதவி பொருட்களை வாங்கி கொண்டிருந்தபோது, அவரது மனைவியிடம் ஒருவர், திடீரென உதவிப்பொருட்களை தருவதற்குள் ஆர்வ கோளாறில் பிடித்து இழுத்துள்ளார்.

கோபம் அடைந்த இர்ஃபான்

அப்படி பொருளை அவசரப்பட்டு புடுங்கிய போது, இர்ஃபானின் மனைவி மீது கையை நகத்தால் இழுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இர்ஃபான், இப்படி அசிங்கமா பண்ணாதீங்கமா.. ஏம்மா பிடிச்சு இழுக்காதீங்க.. கொடுக்க தானே வந்திருக்கோம்.. ஏன் பிடிச்சு இழுக்குறீங்க என திட்டியிருந்தார்.இதை தனது யுடியூப் பக்கத்திலும் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

விஜே பார்வதி விமர்சனம்

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், யூடியூபர் இர்ஃபானை கடுமையாக விமர்சித்தனர். காருக்குள் உட்கார்ந்து கொண்டே உதவி செய்த இர்ஃபான் கோபத்தில் பேசியதையும் வீடியோவில் பதிவு செய்து அதனை வெளியிட்டது தவறு என்று விமர்சித்து வந்தனர். இவர் பெரிய ஜமீன் பரம்பரை என்று கடுமையாக விமர்சித்தார்கள். இதை பார்த்து சமூக ஊடக பிரபலமான விஜே பார்வதியும் விமர்சித்தார். அப்போது விஜே பார்வதி கூறுகையில் , "இவருடைய மனைவியை அவ்வளவு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்றால், இந்த மாதிரி சமூக நல செயல்களுக்கு கூட்டிக்கொண்டே வந்திருக்கக்கூடாது..

ரத்தன் டாடா

காருக்குள் வைத்துக்கொண்டு... வீட்டில் விட்டுவிட்டு வர வேண்டியது தானே.. ரத்தன் டாடாவை பற்றி தயவு செய்து படிங்க.. ரத்தன் டாடா தன் வாழ்க்கையில் சம்பாதித்த மேஜர் பணத்தை இல்லாதவங்களுக்கு கொடுத்துவிட்டு சென்றார்... அவர் அப்படி கொடுத்ததை எங்குமே விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை..

புதுப்பணக்காரர்கள்

ஆனால் இந்த புதுப்பணக்காரனுங்க இருக்காங்க பார்த்தீங்களா.. இவங்க பண்ற கூத்து இருக்கே .. தன்னிடம் காசு இருக்கிறது என்பதை வந்து.. எப்படி எல்லாம் கேவலமாக.. இங்க தான் அவனது மூளை வெளிப்படுது.. இந்த மாதிரி சீப் மெண்டாலிட்டி உள்ளவர்களைபற்றி பெரிய லிஸ்டே இருக்கிறது.. இவனுங்களையா நம்ப வந்து புரேமோட் பண்றது.. நாடு நாசமாக போக வாழ்த்துக்கள்." இவ்வாறு விஜே பார்வதி கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்ட வீடியோவில் பேசியிருந்தார்.

இர்ஃபான் மன்னிப்பு

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.சிலர் இர்ஃபானுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டனர். இர்ஃபான் மீது உள்ள வன்மத்தில் இப்படி விஜே பார்வதி பேசியிருக்கதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டனர். இதனிடையே இர்ஃபான் தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

கையாள தெரியவில்லை

இது பற்றி இர்ஃபான் கூறுகையில், "முன்னேற்பாடுகள் ஏதுமின்றி உதவி செய்ததால், அந்த சூழலை கையாள தெரியவில்லை. இதனால் சில விஷயங்களை செய்துவிட்டேன். நான் செய்தது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள். கஷ்டப்படுபவர்கள் மீது அக்கறை இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நானும் அங்கிருந்து வந்தவன் தான்" இவ்வாறு கூறியிருந்தார்.

வன்மம் இல்லை

இதனிடையே தன் மீதான விமர்சனத்திற்கு விஜே பார்வதி விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியாவில் அவர் கூறுகையில், "விஜே பார்வதி வன்மத்தில் பேசுவதாக சிலர் கூறுகிறார்கள்.. வன்மத்தில் பேசுவதாகவே வைத்துக் கொள்ளுங்கள்.. நான் ஒரு ட்வீட் போட்டிருந்தேன்.. எதனால் இர்ஃபான் அவர்களுக்கு செலிபிரிட்டிகள் திரும்ப திரும்ப இண்டர்வியூ கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்..இண்டர்வியூ என்ற பெயரில் பூஜ்ஜியம் தயாரிப்புடன் வருகிறார் அவர்..

இண்டர்வியூ

எத்தனை செய்தியாளர்கள் இருக்கிறார்கள்.. எத்தனை யூடியூப் ஆங்கர்கள் இருக்கிறார்கள்.. ஒரு மோகன் லால் பிரித்விராஜ் அவர்கள் உள்பட பெரிய பெரிய ஆட்கள் பேச வேண்டும் என்று வந்து, அதற்கு சரியான தயாரிப்புகளுடன் வருகிறார்கள்.. நிறைய யூடியூபர்களுமே இண்டர்வியூக்கு தயாரிப்புகளுடன் இருக்கிறார்கள்... அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு வாய்ப்பு இவருக்கு (இர்ஃபானுக்கு) கிடைக்கிறது. சரி ஓகேபா..உங்களுக்கு நான்கு மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள்.. இண்டர்வியூக்களை பிஆர்ஓக்கள் அரேன்ஜ் பண்ணி கொடுக்குறாங்க அப்படீன்னா.. அதற்கு குறைந்த பட்சமாவது ஒரு பிரிப்ரேசன் இருக்கனுமா இல்லையா?

நமட்டு சிரிப்பு

நாங்கள் வந்து ஒரு நிறுவனத்திற்கு கீழ் பணியாற்றும் ஆங்கர்கள் வந்து , ஒரு கேள்வி தப்பா கேட்டோம் என்றால், இதெல்லாம் எவன் ஆங்கராக போட்டான்.. இவன் எல்லாம் எதற்கு கேள்வி கேட்கிறான்.. இவனை எல்லாம் எதற்கு கேள்வி கேட்க விடுகிறார்கள்.. அப்படி எல்லாம் கமெண்ட் பண்றீங்க இல்லையா? அப்படி என்றால், குறைந்த பட்ச பிரிப்ரேசனாவது அந்த புட் விலாகருக்கோ.. இல்லை என்றால் ஒரு ஜென்சி (2கே கிட்ஸ்க்கு அடுத்தவர்கள்) கிட்டோ எடுக்குறாங்க... அண்மையில் கூட யுவன் சங்கர் ராஜாவை எடுத்தார்.. ஜென்சி கிட்டாவே இருந்தாலும், ஒரு பேசிக் பிரிப்ரேசன் கூட இல்லாமலா வருவாய்... தெரியவில்லை என்றதும் ஒரு நமட்டு சிரிப்பு வேற..

தவறான நபர்

சொல்ல வரும் பாயிண்ட் என்னவென்றால்.. இதை வன்மம் என்று சொன்னால் கண்டிப்பாக சொல்லவே முடியாது.. இதை என் அப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. தவறான நபர்கள் சரியான இடத்தில் இருக்கிறார்கள் என்று தான் இதை சொல்வேன்.. என்ன வேண்டுமானாலும் இண்டர்வியூ எடுத்துக் கொள்... மமுக்காவை மாமுக்கா என்கிறாய்.. ஒரு பெயரைக்கூட ஒழுங்காக சொல்லத் தெரியவில்லை.. இது அடிப்படையான கோபம் இல்லையா? இது நேர்மையான கோபம்" இவ்வாறு விஜே பார்வதி தனது வீடியோவில் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+