Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொளத்தூரை குறிவைத்த தவெக.. முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கும் பிரபல தொழில் அதிபர்.. யார் அவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் ஒய்பிஎம் டிராவல்ஸ் நிறுவனர் பாலாஜி களம் இறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது. முன்னதாக தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் அது வதந்தி என்பது பின்னர் தான் தெரியவந்தது. தற்போது தமிழக வெற்றி கழகம் சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக்கழகம் 2026 சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களம் இறங்க போகிறது. நடிகர் விஜய்யை தலைவராக கொண்ட தவெகவின் பலம் இதுவரை யாருக்கும் தெரியாது. விஜய்யிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், பல லட்சம் பேர் அவரது கட்சியில் இணைந்துள்ளார்கள். அவரது கட்சியில் 30வயதிற்கு கீழ் பலர் உள்ளார்கள். தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும், திமுக மற்றும் அதிமுக இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது. இந்த முறை விஜய்யின் தவெக களம் இறங்குவதால் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளது.

YBM Travels founder Balaji likley contesting on behalf of the Tvk party opposing MK Stalin in Kolathur

விஜய் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக மாவட்ட செயலாளர்களை வேட்பாளர் பட்டியல்களை அனுப்பி வைக்குமாறு விஜய் கேட்டுள்ளாராம். அந்த பட்டியல் ஒருபுறம் எனில், தனியார் ஏஜென்சிகளும், வேட்பாளர் பட்டியலை தயாரிக்க உள்ளதாம். இரண்டிலும் பார்த்து, ஆய்வு செய்து விஜய் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போதைய நிலையில் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து பிரபல தொழில் அதிபரான ஒய்பிஎம் டிராவல்ஸ் நிறுவனர் பாலாஜி களம் இறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

YBM Travels founder Balaji likley contesting on behalf of the Tvk party opposing MK Stalin in Kolathur

முதல்வர் ஸ்டாலின் கடந்த 2011, 2016, 2021 ஆகிய மூன்று முறையும் கொளத்தூரில் நின்று வெற்றி பெற்றுள்ளார். அங்கு வலுவான நபரை களம் இறக்க வேண்டும் என்று விரும்பிய விஜய், ஒய்பிஎம் டிராவல்ஸ் நிறுவனர் பாலாஜியை களம் இறக்க வாய்ப்பு உள்ளதாக தவெக வட்டாரங்கள் சொல்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கும் தொழில் அதிபர் பாலாஜி, அண்மையில் நடந்த கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தனது பேருந்துகளில் அழைத்து வந்து விஜயை சந்திக்க வைத்து மீண்டும் கரூரில் கொண்டு போய் விட்டார். அதன்பின்னர் விஜய்க்கு பாலாஜி மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஒய்பிஎம் டிராவல்ஸ் நிறுவனர் பாலாஜியும் வட சென்னையின் முக்கிய தொகுதியான கொளத்தூரில் களம் இறங்க விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. வேட்பாளர்கள் தவெகவில் கடைசி நேரத்தில் அறிவிக்காமல் விரைவாகவே அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது தான் தேர்தல் பணிகளில் ஈடுபட வசதியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+