பெட்ரூமில்.. ஸ்விட்ச் போர்டு.. பல்புகளில்.. ஒரு இடம் விடாமல் கேமிரா.. 2019ஐ மிரள வைத்த ஆபாச சஞ்சீவி!
லேடீஸ் ஹாஸ்டலில் ஆபாச வீடியோ எடுத்த சஞ்சீவியை மறந்துவிட முடியாது
Recommended Video
சென்னை: சஞ்சீவியை நினைவிருக்கிறதா.. லேடீஸ் ஹாஸ்டல் பெட்ரூம் & பாத்ரூம்களில் கேமிரா வெச்சி.. ரகசியமாக வீடியோ எடுத்தாரே! அந்த சம்பவத்தின் அதிர்ச்சி வருடத்தின் இறுதி வரை குறையவே இல்லை என்பதே உண்மை!
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ளது பிரைவேட் லேடீஸ் ஹாஸ்டல்.. இங்கு ஐடி நிறுவனங்களில் வேலைபார்த்த பெண்கள் தங்கியிருந்தனர்.
இந்த ஹாஸ்டல் ஓனர் சஞ்சீவி.. திருச்சியைச் சேர்ந்தவர்.. இந்நிலையில் அடிக்கடி இந்த பெண்களின் ரூம்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அடிக்கடி இப்படியே சீரமைப்பு பணிகள் நடந்து வந்ததால், பெண்கள் குழப்பமடைந்தனர்.

செல்போன்கள்
அதனால், தங்களுடைய அறையில் ரகசிய கேமிரா ஏதாவது வைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் இந்த பெண்களுக்கு ஏற்பட்டது. இதை கண்டறிவதற்காக தங்களுடைய செல்போன்களில் இருந்து Hidden Camera Detector என்ற ஆப்பை டவுன்லோடு செய்தனர். இதன்மூலம்தான் சஞ்சீவியின் காமகொடூரம் வெளிப்பட்டது.. எல்லா ரூம்களிலும் சோதனை நடத்தியபோது, ரகசிய கேமராக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆதம்பாக்கம் போலீசில் புகார் தந்தனர்.

கேமிராக்கள்
போலீசார் விரைந்து வந்து, ஹாஸ்டலின் பெட்ரூம், பாத்ரூம்களில் உள்ள ஸ்விட்ச் போர்டு, டிரஸ்களை மாட்டி வைக்கும் ஆங்கர்களில் கேமிராக்களை வைத்திருந்தார் சஞ்சீவி.. அது மட்டுமில்லை.. லைட்டுகள், பல்புகளில்கூட என கண்ணுக்கு தெரியாத அளவு கொண்ட கேமிராக்களை சொருகி வைத்திருந்தார்.
இதையடுத்து சஞ்சீவியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி, 16 செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், ரகசிய கேமிராக்களை பறிமுதல் செய்தனர்.

ஆபாச வீடியோ
வாக்குமூலத்தில் சொன்னதாவது: "ஆரம்பத்தில் நான் சம்பாதித்த பணத்தை பெண்களுடன் ஜாலியாக இருந்தே செலவிட்டேன்.. அதில் எனக்கு கடன் ஆகிவிட்டது.. அதனால் செல்போன்களில் ஆபாச வீடியோ பார்த்தேன்.. பிறகு அதையெல்லாம் நேரில் பார்க்க ஆசை வந்துவிட்டது.. அதனால்தான், லேடீஸ் ஹாஸ்டலே ஆரம்பித்து, கேமிரா வைத்தேன்.. பெட்ரூமில் பிளக் பாயின்டில் நான் வைத்த கேமிராதான் காட்டி கொடுத்துவிட்டது.

அதிர்ச்சி
இந்த வீடியோவெல்லாம் அங்கேயே உட்கார்ந்து கொண்டு நைட் வரை பார்ப்பேன்.. அதுக்கப்பறம், டவுன்லோடு செய்துகொண்டு, வீட்டுக்கு வந்து பெண்கள் குளிப்பது, டிரஸ் மாற்றுவது என எல்லாத்தையும் விடிய விடிய பார்ப்பேன்" என்றார். வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து கிளம்பி வந்து.. இதுபோன்ற லேடீஸ் ஹாஸ்டலில் நம்பி தங்கி படிக்கும் பெண்கள் மத்தியில் இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதை நம்மால் மறக்கவே முடியாது!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications