அட பாவமே.. 2021 முழுக்க இந்திய மக்கள் இதைத்தான் கூகுளில் அதிகம் சர்ச் பண்ணாங்களா? முதல்முறை இப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021ல் கூகுளில் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் என்னென்ன என்று கூகுள் பட்டியல் வெளியிட்டுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் இறுதியில் கூகுள் நிறுவனம் தங்கள் சர்ச் எஞ்சினில் வருடம் முழுக்க எது அதிகம் சர்ச் செய்யப்பட்டது என்று விவரம் வெளியிடும். ஒவ்வொரு நாட்டிலும் வருடம் முழுக்க எது அதிகம் சர்ச்சை செய்யப்பட்டது என்ற விவரத்தை கூகுள் வெளியிடும்.

இந்த விவரத்தை வைத்தே அந்த வருடம் மக்கள் மனநிலை எப்படி இருந்தது, அந்த வருட டிரெண்ட் எப்படி இருந்தது, எது அதிகம் பேசப்பட்டது என்று கண்டுபிடித்துவிடலாம்.

கூகுள் டிரெண்ட்

கூகுள் டிரெண்ட்

பொதுவாக இதற்கு முந்தைய வருடங்களில் எல்லாம் இந்தியாவில் சினிமா, ஸ்போர்ட்ஸ், அரசியல் தொடர்பான விஷயங்கள் கூகுளில் டிரெண்டில் அதிகம் இடம்பெறும். உதாரணமாக இவரின் ஜாதி என்ன, அவரின் ஜாதி என்ன என்று பிரபலங்கள் குறித்த கேள்விகள் அதிகம் எழுப்பப்படும். உதாரணமாக இப்போது ட்விட்டர் சிஇஓவாக பராக் அக்ரவால் வருகிறார் என்றால் உடனே அவரை பற்றி பலர் தேடுவார்கள்.

சர்ச்சை

சர்ச்சை

அவரின் ஜாதி பற்றி பலர் தேடுவார்கள். இது போக பிரபஞ்ச அழகி ஆகி உள்ள இந்தியாவின் ஹர்ன்ஸ் சந்து குறித்து மக்கள் அதிகம் தேடி இருப்பார்கள். அல்லது கிரிக்கெட் பற்றி. ஆனால் இப்படி எந்த விதமான தேடலும் இந்த முறை கூகுள் இந்தியாவில் அதிகம் இடம்பெறவில்லை. ஆம் மக்கள் பெரிதாக ஜாதி குறித்தோ, பிரபஞ்ச அழகி குறித்தோ, கிரிக்கெட் இந்த வருடம் கவலைப்படவில்லை. மாறாக அவர்கள் கவலைப்பட்டது எல்லாம் கொரோனா பற்றி!

முதல் முறை

முதல் முறை

ஆம் இந்தியாவில் முதல்முறை கூகுளில் மக்கள் ஒருவருடம் முழுக்க கொரோனா குறித்தும் வேக்சின் குறித்தும் அதிகம் தேடி உள்ளனர்.

1. கொரோனா வேக்சின் பெற எப்படி ரிஜிஸ்டர் செய்வது?
2. கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை எவ்வாறு டவுன் லோட் செய்வது?
3. உடலில் ஆக்சிஜன் அளவை எப்படி அதிகரிப்பது?

ஆகிய மூன்று விஷயங்கள்தான் இந்தியாவில் கூகுளில் டாப் இடங்களை பிடித்துள்ளது.

மற்ற இடங்கள்

மற்ற இடங்கள்

4. ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் இணைப்பது எப்படி?
5. வீட்டிலேயே ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி?
6. இந்தியாவில் dogecoin வாங்குவது எப்படி?

ஆகியவற்றையும் மக்கள் சர்ச் செய்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் முதல் மே வரை கொரோனா நோயாளிகள் பலர் ஆக்சிஜன் இன்றி அதிகம் கஷ்டப்பட்டனர். இந்த சமயத்தில் ஆக்சிஜன் குறித்து அதிகம் தேடப்பட்டுள்ளது. மக்களின் கஷ்டத்தை, இந்தியா கடந்து வந்த இருண்ட காலத்தை இந்த சர்ச் ரிசல்ட்ஸ் உணர்த்தி உள்ளது.

பிட்காயின்

பிட்காயின்

இது போக கிரிப்டோகரன்சி மோகமும் மக்கள் மத்தியில் உயர்ந்துள்ளதை கூகுள் டிரெண்ட்ஸ் காட்டுகிறது. பின் வரும் சர்ச்கள் கூகுளில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

7. வாழைப்பழ ப்ரட் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
8. ஐ.பி.ஓவில் உள்ள ஒதுக்கீடு நிலவரத்தை எப்படி சோதிப்பது?
9. பிட்காயினில் எப்படி முதலீடு செய்வது?
10. மதிப்பெண்களுக்கான சதவீதத்தை எப்படி கண்டுபிடிப்பது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+