தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானதும் டெல்லியையே அதிர வைத்த குஷ்புவின் பேச்சு! பிளாஷ்பேக் 2023
சென்னை: நடிகை குஷ்புவுக்கு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினர் பதவி கிடைத்தது முதல் அவருக்கு சிறுவயதில் தந்தையால் நேர்ந்த பாலியல் கொடுமை வரை 2023 ஆம் ஆண்டு நடந்த பரபரப்புகளை மறக்க முடியுமா?
1980களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. இது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என நூற்றுக்கும் மேற்பட்டங்களில் நடித்துள்ளார். நடிகர்கள் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார், கார்த்திக், நெப்போலியன், சத்யராஜ் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

இவர் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணாத்த படத்தில் குஷ்பு நடித்திருந்தார். அதில் ரஜினியின் அத்தை மகளாக நடித்தார்.
இவர் 2010 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தீவிர விசுவாசியாக இருந்தார். அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவை விட்டு விலகினார். இதையடுத்து அதே ஆண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைந்தார்.
இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து 2020 ஆம் ஆண்டு விலகி, பாஜகவில் இணைந்தார். சேர்ந்த அடுத்த ஆண்டே தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார். இதையடுத்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியை பெற்றார். மேலும் இவருக்கு இந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினர் பதவியும் கிடைத்தது.
தமிழகத்திலிருந்து ஒருவர் பெண்ணுரிமைக்காகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்காகவும் குரல் கொடுக்க டெல்லி சென்றுள்ளது தமிழக மக்களாகிய நமக்கு பெருமையே! கட்சியில் நிறைய பேர் இருக்கும் போது குஷ்புவுக்கு இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பதவி கிடைத்தது பெரும் ஆச்சரியம் ஆகும்.
இந்த பதவியேற்புக்கு பிறகு, குஷ்பு ஒரு விழாவில் பேசும் போது தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். குஷ்பு பேசுகையில் நான் 8 வயதாக இருக்கும் போது என் தந்தையால் பாலியல் சீண்டலுக்குள்ளானேன். நான் இதை வெளியே சொன்னால் என் அம்மாவை துன்புறுத்துவேன் என தந்தை மிரட்டினார்.
ஏற்கெனவே என் அம்மாவை அவர் அடித்து துன்புறுத்தி வருவதை பார்த்த எனக்கு இந்த மிரட்டல் மேலும் அச்சத்தை தந்தது. இதனால் நான் எனக்கு நடந்த விஷயத்தை என் அம்மாவிடமும் என் 3 சகோதரர்களிடமும் சொல்லவில்லை. 8 வயது முதல் பாலியல் தொல்லைக்குள்ளான எனக்கு அதை எதிர்க்கும் தைரியம் 15 வயதில்தான் வந்தது. அப்போது அவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர்தான். திரும்ப வரவே இல்லை என தெரிவித்திருந்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேசிய மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவாலும் தான் சிறுமியாக இருந்த போது தன்னை அடித்து தனது தந்தை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அவர் வீட்டுக்கு வரும் போதெல்லாம் நான் பயந்து போய் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்வேன் என தெரிவித்திருந்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு தைரியமாக தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லியதும் அந்த ஆணையத்தின் தலைவியையும் சொல்ல வைத்துவிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications