Year Ender 2025: சென்னை முதல் கோவை வரை.. 2025-இல் தமிழகத்தை உலுக்கிய என்கவுண்டர்கள்!
சென்னை: 2025 ஆம் ஆண்டு இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஓரிரு நாளில் புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில், இந்த வருடத்தில் பல மறக்க முடியாத சம்பவங்களை நினைவுபடுத்தி வருகிறோம். அந்த வகையில், தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கியமான என்கவுன்டர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவு பெற்று 2026 இன்னும் சில தினங்களில் பிறக்க இருக்கிறது. ஆண்டின் நிறைவு கட்டத்தில் இருக்கும் நிலையில், நடப்பு ஆண்டில் மறக்க முடியாத பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. மாநிலம், தேசம், சர்வதேச அளவில் உலுக்கிய நிகழ்வுகள் பல நடைபெற்றுள்ளன.

சென்னை தரமணியில் என்கவுண்டர்
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், இந்த ஆண்டு மறக்க முடியாத பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு என்கவுன்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டில் நடைபெற்ற சில முக்கியமான என்கவுன்டர்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கொள்ளையடித்த நகைகளை எடுத்து கொடுக்க செல்வதாக கூறி, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப ஜாபர் தப்ப முயன்றார். அங்குள்ள காலி மைதானத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியதோடு, போலீசாரை நோக்கி சுட முயன்றதால் போலீசார் தற்காப்புக்காக என்கவுன்டர் செய்தனர்.
செயின் பறிப்பு கொள்ளையன்
என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையன் ஜாபர், சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் ஒரே நாளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் ஆவார். செயின் பறிப்பில் ஈடுபட்ட ஜாபர் உள்பட இருவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இருவருமே இராணுவ கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளியான ஜாபர் தான் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
கொள்ளையன் முட்டை விஜய்
மார்ச் 31: மதுரையில் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடைய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஏப்ரல் 01: கடலூரில் லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுவையைச் சேர்ந்த கொள்ளையன் விஜய், போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். புதுசத்திரம் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் லாரி டிரைவர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டது.
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கொள்ளையன் விஜயை சுற்றி வளைத்த போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாகவும், அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கொள்ளையன் முட்டை விஜய் உயிரிழந்தார்.
போலீசை அரிவாளால் வெட்டியவர்

ஆகஸ்ட் 07: திருப்பூர் உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பணியாற்றி வந்த தந்தை-மகன்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீஸ் எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் என்பவரை மூன்று பேரும் அரிவாளால் வெட்டினர். தமிழ்நாட்டை அதிர வைத்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கோவை கொள்ளை சம்பவம்
கடந்த மாதம் இறுதியில் கோவையில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஆசிப் என்பவர் உயிரிழந்தார். கோவை கவுண்டம்பாளையம் அருகே அரசு குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் ஆசிப், இர்பான், கல்லூ ஆகியோரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆசிப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications