தமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை.. மஞ்சள் அலர்ட் பிறப்பித்த இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலைமையில் தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
Recommended Video
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது.
மயிலாப்பூரில் அதிகபட்சம் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த நிலையில்தான் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்று ஒரு எச்சரிக்கையை பிறப்பித்தது.

மஞ்சள் எச்சரிக்கை
இதற்கு இடையே இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு, மஞ்சள் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த எச்சரிக்கை தொடரும். அதன் பிறகு சற்று மழை குறைந்த போதிலும் நவம்பர் 3ம் தேதிக்கு பிறகு, மீண்டும் தமிழகத்தில் கன மழை தொடங்கும், என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழை எச்சரிக்கை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற வடக்கு தமிழகம், அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் தொடரும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

மெரினா வெள்ளம்
2015 ஆம் ஆண்டு சென்னையில் பெரிய பள்ளம் புரட்டிப்போட்டது. ஒரே நாளில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மிகப்பெரிய மழை பெய்தது. இப்போது ஒரே நாளில் 20 செமீ மழை பெய்துள்ளது. மெரினாவில் 2017க்கு பிறகு முதல் முறையாக வெள்ளம் தேங்கியுள்ளது.

சென்னை மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில், பாலவாக்கம் 14 சென்டிமீட்டர், பாடி 12 சென்டிமீட்டர், ஜார்ஜ் டவுன் 11 செ.மீ மற்றும் கொரட்டூர் மற்றும் அண்ணாநகர் தலா 10 சென்டிமீட்டர், நுங்கம்பாக்கம் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 2017 நவம்பர் பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் இவ்வளவு அதிக மழை பெய்தது இதுதான் முதல் முறையாகும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications