போன் செய்தது உண்மைதான்.. துரைமுருகனிடம் போனில் பேசியது என்ன? சுதீஷ் பரபரப்பு விளக்கம்!
திமுக பொருளாளர் துரைமுருகனிடம் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் போனில் பேசியது என்ன என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகனிடம் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் போனில் பேசியது என்ன என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.
தேமுதிக - திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது பெரிய சர்ச்சையிலும், பரபரப்பிலும் முடிந்து இருக்கிறது. தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் திமுக பொருளாளர் துரைமுருகனிடம் போனில் பேசியது என்ன என்பதுதான் தற்போது பெரிய கேள்வியாக உள்ளது.
தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். திமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

நிர்வாகிகள் பேட்டி
இந்த சந்திப்பில் தேமுதிக நிர்வாகிகள் சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் முதலில் விளக்கம் அளித்தனர். அதில், திமுக பொருளாளர் துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காக பார்க்க சென்றோம். நாங்கள் அரசியலே பேசவில்லை.மரியாதை நிமித்தமாக துரைமுருகனை சந்தித்தோம். துரைமுருகனிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. நாங்கள் துரைமுருகனை சந்தித்தது சுதீஷுக்கு தெரியாது, என்றனர்.

சுதீஷ் பேட்டி
அதன்பின் பேசிய சுதீஷ், திமுகவுடன் தேமுதிக பேசுவதாக எல்லோரும் கூறுகிறார்கள். நாங்கள் முதலில் பாஜகவுடன் கூட்டணி குறித்தும் பேசினோம். பாஜகவினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால், நாங்களும் அதிமுகவுடனும் பேசினோம். பாமகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, எங்களுடனும் ஒப்பந்தம் செய்திருக்கலாம்.

வருத்தம்தான்
பாமகவுடன் செய்தது போல அதிமுக எங்களுடன் ஒப்பந்தம் செய்யாதது வருத்தம் அளித்தது. ஒரே நாளில் ஒப்பந்தம் செய்து இருக்கலாமே. திமுக அதன்பின் எங்களுடன் பேசியது. எங்கள் வீட்டிற்கு வந்து கூட்டணி குறித்து பேசினார்கள்.

எதிர்க்கவில்லை
பாமக - அதிமுக கூட்டணியை நாங்கள் எதிர்க்கவில்லை. ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் ஆலோசனை செய்ய கூடாதா.? நானும் துரைமுருகனும் பக்கத்து பக்கத்து ஊர். நாங்கள் பேச நிறைய விஷயம் இருக்கிறது. நாங்கள் அரசியல் மட்டும்தான் பேச வேண்டுமா சொல்லுங்கள். நாங்கள் பலமுறை சந்தித்து இருக்கிறோம்.

உண்மையை சொல்லட்டுமா
நான் துரைமுருகனுக்கு போன் செய்தது உண்மைதான். நேற்று துரைமுருகன் என்னிடம் பேசியதை நான் சொல்லட்டுமா. துரைமுருகன் அவரின் கட்சியை பற்றி பேசியதை சொல்லட்டுமா. துரைமுருகன் அவரின் தலைமை குறித்து பேசியதை சொல்லட்டுமா. உண்மைகளை சொன்னால் அசிங்கமாகிவிடும், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications