Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் நள்ளிரவில் பெய்த பலத்த மழை.. இன்று சென்னை உள்பட 18 மாவட்டங்களில் சூப்பர் மழை இருக்கு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கனமழையால் நெல்லை அணைகளின் நீர்மட்டம் உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி!!

    சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிளரவில் திடீரென கனமழை பெய்ததால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில நேற்று நள்ளிரவிலும் திடீரென கனமழை பெய்யத்தொடங்கியது. இன்று காலை பல இடங்களில் மழை பெய்தது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்றும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    yesterday heavy rain in chennai, 18 districts may get rain today

    சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று கூறுகையில்,. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, தேனி, நீலகிரி, கடலூர், நெல்லை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துககுடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

    இதனிடையே சென்னை பூந்தமல்லி, தரமணி, அண்ணா பல்கலைக்கழக வளாகம் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழையும், சோழவரம், தாமரைப்பாக்கம். திருவள்ளூர் பகுதிகளில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல் சென்னை டி.ஜி.பி. அலுவலகம், பொன்னேரி, தேவாலா (நீலகிரி), மானாமதுரை (சிவகங்கை), திருவாலங்காடு (திருவள்ளூர்), கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+