உடம்பெல்லாம் தொட்டு "யோகா".. பலமுறை மிரட்டி மிரட்டியே.. கதறிய இளம்பெண்.. மாஸ்டரை தட்டிதூக்கிய போலீஸ்

இளம்பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் தந்த யோகா மாஸ்டர் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பாட்னர் யோகா" என்ற பெயரில் உடம்பில் உள்ள அனைத்து பாகங்களையும் தொட்டு செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், பலமுறை தன்னை மிரட்டி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் மருத்துவ துறை சார்ந்த பெண் ஒருவர், யோகா ஆசிரியர் மீது போலீசில் புகார் தந்துள்ளார்... இதையடுத்து சம்பந்தப்பட்ட யோகா மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் அந்த இளம் பெண்.. 21 வயதாகிறது.. மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த யோகா மையம் ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் பயிற்சிக்காக சேர்ந்துள்ளார்.. அந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவ - மாணவிகள் யோகா கற்று வருகிறார்கள்.

 இளம்பெண்

இளம்பெண்

இந்த நிலையில் யோகா மாஸ்டர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மருத்துவ மாணவி பகீர் புகாரை கிளப்பி உள்ளார்.. கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த மாணவி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் தந்துள்ளார்.. அந்த புகார் இதுதான்:

பாட்னர் யோகா

பாட்னர் யோகா

"யோகா வகுப்பில் சேர்ந்த நாள் முதல் "பாட்னர் யோகா" என்ற பெயரில் உடம்பில் உள்ள அனைத்து பாகங்களையும் தொட்டு செக்ஸ் தொல்லை கொடுத்தார்... வாட்ஸ்அப் மூலமாக என்னை காதலிப்பதாக தகவல் அனுப்பினார். நான் இதுபோன்று செய்யக்கூடாது என கூறியும் கேட்கவில்லை... இரட்டை அர்த்தத்துடன் என்னிடம் பேசி வந்தார்... அதுபற்றி கேட்டபோது, அது "ஆன்மீக ஞானம்" என்று தெரிவித்தார்.

 ஜூஸ்

ஜூஸ்

கடந்த ஏப்ரல் மாதம் எனக்கு பிறந்த நாள் என்று சொல்லி வீட்டுக்கு அழைத்தார்.. வீட்டில் எல்லாரும் வெளியில் சென்று விட்ட நிலையில் நானும் கிளம்பினேன்.. அப்போது எனக்கு குடிப்பதற்கு கூல்டிரிங்ஸ் கொண்டு வந்து தந்தார்.. அதை வாங்கி குடித்த பிறகு என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை... மயக்க நிலையில் இருந்த என்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டார்.

 செல்போன்

செல்போன்

பிறகு அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் சொன்னார்.. அந்த வீடியோவை வைத்தே பலமுறை மிரட்டி என்னை பலாத்காரம் செய்தார்.. பணமும் பறித்துள்ளார்... யோகா ஆசிரியரின் செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருக்கிறது.. கடந்த மாதம் 25-ந்தேதி நான் பணிபுரியும் இடத்துக்கு வந்த அவர் நான் சொல்வதை கேட்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று என்னை மிரட்டினார்..

 டீச்சர் கைது

டீச்சர் கைது

அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, யோகா ஆசிரியரின் செல்போனில் உள்ள என்னுடைய ஆபாச வீடியோக்களை அழிப்பதற்கும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த பெண் கேட்டுக் கொண்டுள்ளார்... இந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கையை எடுத்ததுடன், சம்பந்தப்பட்ட யோகா மாஸ்டரை கைது செய்துள்ளனர்.. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+