இனி நீங்க யாரும் ரசிகர்கள் இல்லை.. வாரியர்ஸ்! வீடியோவில் வந்து அட்வைஸ் செய்த தவெக தலைவர் விஜய்
சென்னை: இனி நீங்க யாரும் ரசிகர்கள் இல்லை.. விர்ச்சுவல் வாரியர்ஸ்.. என்று தவெக தலைவர் விஜய் நிர்வாகிகளை கூறியுள்ளார். இந்தியாவிலேயே மிகப்பெரும் படையாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது என்றும், கண்ணியமாக செயல்பட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு தவெக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி மூலம் விஜய் உரையாற்றினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்க உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லை. இதனால், தனது கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சி பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

ஐடி விங் பிரிவு ஆலோசனை கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கும் போதே தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தலா 2 தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். சில சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்றும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 144 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் 6 மாவட்ட செயலாளர்களுக்கான நியமனம் விரைவில் நடைபெற உள்ளது. வரும் 26, 27 ஆம் தேதிகளில் கோவையில் பூத் கமிட்டி மாநாடு நடத்தவும் தவெக திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, தவெக கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
த.வெ.க ஐ.டி விங் நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், காணொளி காட்சி வாயிலாக அறிவுரை வழங்கினார் @TVKVijayHQ pic.twitter.com/SQIsADbRx8
— Thamaraikani (@kani_twitz24) April 19, 2025
வீடியோவில் வந்த விஜய்
இந்தக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் பணி மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் போது விஜய் காணொலி காட்சி மூலமாக பேசுவதாக இருந்தது. ஆனால் விஜய் வீடியோ ரெக்கார்டு செய்து பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது.
விஜய் கூறியதாவது:- "ஹாய்.. ஹாய்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க.. மீட்டிங்க் நடக்கும் போதே உங்களிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இங்க கொஞ்சம் நெட்வொர்க் பிராப்ளம். அதனால் தான் என்னால் அப்படி செய்ய முடிவில்லை. வீடியோ ரெக்கார்டு செய்து அனுப்பியிருக்கிறேன். உங்க எல்லாரையும் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். நம்முடைய இந்த சோஷியல் மீடியா படையை தான் இந்தியாவிலேயே மிகப்பெரும் படையாக சொல்கிறார்கள்.
விர்ச்சுவல் வாரியர்ஸ்
இதனை நம்ம சொல்கிறதை விட மற்றவங்களே பார்த்து சொல்றாங்க.. இனிமேல் நீங்க எல்லாரும் சோஷியல் மீடியா ஃபேன்ஸ் மட்டும் கிடையாது. என்ன பொறுத்தவரைக்கும் நீங்கள் எல்லாரும் நம் கட்சியுனுடைய விர்ச்சுவல் வாரியர்ஸ். இப்படித்தான் உங்கள் எல்லாரையும் கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நம்முடைய தமிழக வெற்றிக் கழக ஐடி விங் என்று சொன்னாலே, கண்ணியத்தோடு நடந்துகொள்பவர்கள் என்று எல்லாரும் சொல்ல வேண்டும். இந்த மாதிரி நீங்க நடந்துகொள்ள வேண்டும். கூடிய விரைவில் உங்களை நான் பார்க்க வருகிறேன்.. அதுவரைக்கும் உங்க எல்லாருக்கும் என்னுடைய ஆல் தி பெஸ்ட்.. வெற்றி நிச்சயம்" இவ்வாறு விஜய் பேசிய வீடியோ கூட்டத்தில் போடப்பட்டது. இதை பார்த்ததும் விஜய் கட்சி நிர்வாகிகள் கரகோஷம் எழுப்பினர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது!











Click it and Unblock the Notifications