Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிடிஆருக்கு பதில் நீங்க தான் நிதி அமைச்சராமே! கேள்வியை கேட்டதும் துரை முருகன் கொடுத்த ரியாக்சன்-ஆஹா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் அதுபற்றி இன்று அமைச்சர் துரை முருகன் விளக்கம் அளித்தார். இந்த வேளையில், ‛‛நீங்கள் தான் அடுத்த நிதியமைச்சராமே''என கேள்வி கேட்டகப்பட்டதற்கு துரை முருகன் அல்டிமேட்டராக பதிலளித்து ரியாக்சன் கொடுத்தார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்து 2 ஆண்டு முடிந்துவிட்டது. 3வது ஆண்டு துவங்கி உள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் தனது அமைச்சரவையை மாற்றம் செய்ய உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோரை நீக்கம் செய்து புதிதாக இளம் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர மேலும் சில அமைச்சர்களுக்கு இலாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

You are the one person who will gets finance minister portofolio from PTR? Durai Murugans reacts and says this

குறிப்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பொறுப்பு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று மூத்த அமைச்சர் துரை முருகன் ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி துரை முருகனிடம் கேள்விகள் கேட்டப்பட்டது. அப்போது அவர் ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க இருக்கும் செய்தியை மறுத்தார். மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் , ‛‛அமைச்சர்கள் சுணக்கமாக இருக்கின்றனர். அவர்களை மாற்றுகின்றனர். அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?. இலாக்கா மாற்றத்தில் உங்கள் பெயரும் இருக்கிறதே?. நீங்கள் நிதி அமைச்சராக(பிடிஆருக்கு பதில்) ஆக போகிறதா சொல்கிறார்களே?'' என கேள்வி கேட்டார். அதற்கு துரை முருகன் சிரித்தப்படியே, ‛‛இருக்கட்டும்'' என ரியாக்சன் செய்தார்.

அதன்பிறகு, ‛‛3 துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், உங்களின் பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறதே?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு துரை முருகன், ‛‛யாரு சார் இதெல்லாம் சொல்கிறார்கள். யூகித்து சொல்கிறீர்கள். இந்த கேள்விகளை சித்தரஞ்சன் சாலையில்(முதல்வர் வீடு உள்ள சாலையின் பெயர்) போய் கேட்க வேண்டும்'' என கூறினார்.

You are the one person who will gets finance minister portofolio from PTR? Durai Murugans reacts and says this

அமைச்சரவை மாற்றத்துக்கு முன்பாக ஆளுநரை தலைமை செயலாளர் சந்திப்பது வழக்கம். அதற்கான திட்டம் ஏதேனும் இருக்கிறதா? என கேட்கப்பட்டது. அதற்கு துரை முருகன், ‛‛நீங்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அமைச்சரவையில் மாற்றம் இருக்கிறதா? என்பது எனக்கு தெரியாது. நான் சென்னை வந்தவுடன் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்றேன். நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதாக தெரிவித்தார். அவ்வளவு தான். எனக்கு தெரிந்தால் நானே கூறிவிடுவேன். இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை'' எனக்கூறினார்.

இருப்பினும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் வெவ்வேறு கோணங்களில் கேள்விகள் கேட்டாலும் கூட அமைச்சர் துரை முருகன் மட்டும் உறுதியாக எதையும் சொல்லவில்லை. மாறாக சிரித்தபடி பத்திரிகையாளர்களின் கேள்விகளை சமாளித்து சென்றார். இதனால் தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் உள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+