10 ரூபாய் தான் டிக்கெட்.. கிளாம்பாக்கமே போகாமலேயே சென்னை மக்கள் பஸ் ஏறலாம்.. இறங்கலாம்.. எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புறநகர் ரயிலில் பொத்தேரிக்கு 10 ரூபாய் தான் டிக்கெட் கட்டணம்.. சென்னையில் இருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் ஏறி கிளாம்பாக்கத்திற்கு பதில் பொத்தேரியில் இறங்கி, ஆம்னி பேருந்துகளிலோ அல்லது அரசு பேருந்துகளிலோ எளிதாக செல்ல முடியும்.

சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பேருந்துகள் செல்ல புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30 முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 31 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் சென்னையை நோக்கி புறப்பட்ட அரசு விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் நேற்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தன.

You can board anywhere from Chennai and get down at Potheri instead of Kilambakkam

அதேநேரம் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் வருவதுடன் சென்னைக்குள் சென்று வருகின்றன. பொங்கலுக்கு பிறகே ஆம்னி பேருந்துகள் முழு அளவில் இங்கு இயங்குமா என்பது தெரியும். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இயக்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.. தற்போதைய நிலையில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பராமரிக்க போதிய இடவசதி இல்லை என்று கூறும் அவர்கள், தற்போதுதான் சிஎம்டிஏ சார்பில் 5 ஏக்கர் பரப்பளவில் பணிமனைக்கான இடம் தயார் செய்யப்படுவதாகவும் கூறினார்கள்.

கோயம்பேட்டில் பராமரிப்புக்கு இடம் இருப்பதாக கூறும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கிளாம்பாக்கத்தில் பராமரிப்புக்கான இடம் தயாரான பிறகு அங்கிருந்த பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்கள். எனவே ஆம்னி பேருந்துகள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுமா இல்லையா என்பதை அறிய இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

அது ஒருபுறம் இருக்கட்டும்... புறநகர் ரயிலில் பொத்தேரிக்கு 10 ரூபாய் தான் டிக்கெட் கட்டணம்.. சென்னையில் இருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் ஏறி கிளாம்பாக்கத்திற்கு பதில் பொத்தேரியில் இறங்கி, ஆம்னி பேருந்துகளிலோ அல்லது அரசு பேருந்துகளிலோ எளிதாக செல்ல முடியும்.

ஏனெனில் தற்போதைய நிலையில் சென்னை கிளாம்பாக்கம் இடையே நேரடியாக புறநகர் ரயில் நிலைய வசதி இல்லை.. ஊரப்பாக்கம் அல்லது வண்டலூர் சென்றே ரயிலில் போக முடியும். ஆனால் அதேநேரம் சென்னைக்குள் நுழையும் போதே பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி பயணிகள் ரயில்கள் மூலம் நகரின் பல பகுதிகளுக்கு செல்ல முடியும். அங்கிருந்து வெறும் 10 ரூபாய் தான் டிக்கெட் என்பதால், அங்கிருந்து சென்னைக்குள் புறநகர் ரயில் வழித்தடம் உள்ள பகுதிகளுக்கு எளிதாக போய்விட முடியும்.. முன்பு பெருங்களத்தூர் அல்லது தாம்பரத்தில் இறக்கிவிட்ட போது, ரயிலில் ஏறி மாறி சென்றார்கள். அப்படி பொத்தேரி மாறி இருக்கிறது.

சென்னையில் அம்பத்தூர், கொரட்டூர் , வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவெற்றியூர், திநகர், மயிலாப்பூர், மந்தைவெளி,சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை , பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என சென்னையின் பல்வேறு பகுதி மக்கள் புறநகர் ரயில்களில் ஏறி, பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து அரசு பேருந்துகளிலோ, அல்லது ஆம்னி பேருந்துகளிலோ எளிதாக போக ஏறி சொந்த ஊர் போக முடியும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிக்க புறநகர் ரயில் நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். அதேபோல் உடனடியாக பரங்கிமலை- வேளச்சேரி ரயில் வழித்தடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரண்டும் சென்னை மக்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். ஏனெனில் 30 கிலோ மீட்டர் தூரம் பயணித்து புறநகர் பேருந்து நிலையம் செல்வது என்பது சாமானியர்களுக்கு எளிதானது அல்ல.. அரசு கிளாம்பாக்கத்திற்கு வேண்டிய தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்பதே சென்னை மக்களின் கோரிக்கையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+