வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி, மொபைல், போட்டோவை ஆப் மூலமாக 2 நிமிடத்தில் அழகாய் மாற்றலாம்!
சென்னை: பழைய சிதைந்த வாக்காளர் அடையாள அட்டையை மாற்றி வெறும் 2 நிமிடங்களில் புதிய வண்ணமயமான அழகான வாக்காளர் அடையாள அட்டையை எப்பபடி பெறுவது என்பதை இப்போது பார்ப்போம். இதேபோல் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், முகவரி, மொபைல் எண், போட்டோ என எல்லாவற்றையும் ஆன்லைனில் மாற்ற முடியம்.. எப்படி என்பதையும் சேர்த்து பார்ப்போம்..
வாக்காளர் அடையாள அட்டை என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்தியாவில் 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் வழங்கப்படும் அடையாளம் ஆகும்.. இந்த வாக்காளர் அடையாள அட்டை தான் இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கிறது. தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்வதற்காக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

வாக்காளர்களாகிய நாம் ஓட்டுப்போடும் கடமையை சரியாக செய்தால், இந்தியாவில் வேண்டிய அனைத்து மாற்றங்களையும் கொண்டு வர முடியும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அட்டை தான் வாக்காளர் அடையாள அட்டை
வாக்காளர் அடையாள அட்டையை பொறுத்த வரை 2000களில் வாங்கியவர்கள், 1990களி்ல வாங்கியவர்கள் இதை பாருங்கள்.. அவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.. உங்கள் மொபைலில் பிளே ஸ்டோருக்கு செல்லுங்கள். அங்கு 'voter helpline' என்ற ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள்... உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாக் இன் செய்யுங்கள்... முதல்முறை என்றால் புதிய யூசர் என்பதை தேர்வு செய்து பதிவு செய்து உள்ளே லாக் இன் செய்ய வேண்டும்.
அதில் voter registration என்பதை கிளிக் செய்யுங்கள்.. அதில் new voter registration என்ற டேப்பிற்குள் போக வேண்டும். அதில் உள்ளே போனால், ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதாவது no i already have voter id என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.. அப்படி செய்த பின்னர் அதன்பிறகு வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியுமா என்று கேட்கும்.
அது உங்களுக்கு தெரியும் என்றால், அந்த ஆப்சனை கிளிக் செய்து அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்யுங்கள்.. அதன்பிறகு எந்த மாநிலம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் சப்மிட் கொடுத்த பின்னர், உங்கள் ஆதார் எண், இமெயில் ஐடி, மொபைல் எண், முகவரி என எல்லாமே காட்டும். அதன் பின்னர் நெக்ஸ்ட் ஆப்சனில் correction of entries in existing electoral roll என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், போட்டோ, முகவரி, உறவினர் , உறவினர் வகை (தந்தை அல்லது கணவர் அல்லது பாதுகாவலர் பெயர்) என எதை எல்லாம் மாற்ற வேண்டுமோ அதை எல்லாம் மாற்றிக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு புகைப்படம் மாற்ற வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.. அதில் 200 கேபிக்குள் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை அப்லோடு செய்யுங்கள். அப்படி செய்து சப்மிட் கொடுத்தால், இரண்டு மாதங்கள் கழித்து உங்கள் முகவரிக்கு இந்திய அரசு வழங்கும் வண்ணமயமான அழகான வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் உங்கள் வீட்டிற்கு வரும்..
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications