தமிழ்நாட்டின் சிறந்த எம்எல்ஏக்கள் யார் யார்? அவார்டு தரலாமா? நீங்களே தேர்வு செய்யும் அரிய வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் எம்எல்ஏக்களை தேர்வு செய்யும் சுவாரசியமான வாய்ப்பு ஒன்றை ஒன்இந்தியா தமிழ் செய்தித்தளம் உங்களுக்கு வழங்குகிறது. Engage India Collective Foundation நிறுவனம் நடத்தும் மாபெரும் சர்வேயில் ஒன்இந்தியா தமிழ் வழியாக நீங்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
Engage india collective foundation -ன் சிறப்பான முயற்சிதான் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களை செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யும் TntopMla.com இணையதளம். இந்த முயற்சிக்கு கைகொடுத்து ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் பார்ட்னராக oneindiatamil செயல்பட்டு வருகிறது.

tntopmla.com இணையதளம் என்ன செய்கிறது என்பதைப் பார்ப்போம்
ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் நாம் நமக்கு விருப்பமான கட்சிக்கோ, சின்னத்திற்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ நமது வாக்குகளை செலுத்துகிறோம். அதன்பிறகு 5 ஆண்டுகள் நமது தொகுதி மேம்பாடு, சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள் குறித்து சிந்திக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. நமது அன்றாட பணிகளில் மூழ்கி விடுகிறோம்.
அதையும் மீறி எப்போதாவது சிந்தித்தால் கூட நமது ஆதரவை, எதிர்ப்பை, எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறோமா நாமே நமக்கு கேள்வியாக்கிக் கொண்டால் அதன் பதில் என்னவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.. சரி.. நம்மால் என்ன செய்யமுடியும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? இது போன்ற சூழல்களை மக்கள் உணர்ந்து செயல்பட உருவாக்கப்பட்டதே Engage India Collective Foundation.
பல்வேறு தரப்பு மக்களிடையே அரசியல் சார்பில்லாமல் விருப்பு, வெறுப்பின்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். அதன் அடிப்படையில் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, திட்டங்கள், மக்கள் மற்றும் தொகுதிக்கான செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த சட்டமன்ற உறுப்பினரை மக்களே மதிப்பீடு செய்யு உருவாக்கப்பட்டுள்ள தளம் தான் TnTopMla.com. இந்த தளத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி மக்களும் தங்கள் எம். எல். ஏ வின் செயல்பாடுகள் குறித்து எளிய கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் மதிப்பீடு செய்ய முடியும். மேலும் மதிப்பெண்கள் வழங்கி உங்கள் மதிப்பீடை பதிவேற்றம் செய்யலாம்.
உங்கள் மதிப்பீடுகள் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் தரவரிசையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் சிறந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். இதனை இந்த தளத்தில் மக்கள் நேரடியாகக் கண்காணிக்கவும் முடியும். இப்படிப்பட்ட ஒரு செயல்பாடு அவசியமான ஒன்று என்று கருதுவதாலும் மக்களாட்சியின் மகத்துவத்தைப் பேணவும் இந்த முயற்சிக்கு oneindiatamil கை கொடுக்கிறது. மேலும் கட்சிகள், தலைவர்கள் என்பதைக் கடந்து மக்களுக்கான பிரதிநிதிகளை, மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களை அடையாளம் காணவும் இது உதவும்.
இதன் மூலம் மக்கள் பிரதிநிதியான, சட்டமன்ற உறுப்பினர் சார்ந்திருக்கும் கட்சித் தலைமைக்கும் அவர் குறித்த மக்களின் நிலைப்பாட்டு வெளிப்படையாகத் தெரியவரும். அதேபோல, சட்ட மற்ற உறுப்பினர்களும் மக்களின் மனதை அறிந்து சுய பரிசோதனை செய்து கொள்ள இந்த மதிப்பீடு உதவும் என்று oneindiatamil உறுதியாக நம்புகிறது.
எப்படி வாக்களிப்பது?
நீங்கள் இதில் மிக எளிதாக பங்கு கொள்ள முடியும். கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கில் இந்த சர்வேவிற்கான ஃபார்ம் இணைக்கப்பட்டு உள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து.. அதில் கேட்கப்பட்டு உள்ள விவரங்களை நிரப்பி உங்களுக்கு பிடித்த எம்எல்ஏவிற்கு வாக்களித்தால் போதும். அதிக வாக்குகள் பெற்ற, அதிக மக்கள் ஆதரவை பெற்ற டாப் எம்எல்ஏக்களுக்கு Engage India Collective Foundation நிறுவனம் நடந்தும் TN Top MLA Awards 2025 விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
இதில் ஒரு நபர், ஒரு போன் நம்பர் மூலம் மாதம் ஒரு வாக்கை செலுத்த முடியும். உதாரணமாக ஒரு எம்எல்ஏவிற்கு நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்றால்.. அவருக்கு அதிகபட்சம் + 7 மார்க் வரை கொடுக்க முடியும். ஒருவேளை அவரின் செயல்பாடு உங்களுக்கு பிடிக்கவில்லை குறைந்தபட்சம் -7 மார்க் வரை கொடுக்க முடியும். அவர்கள் பெறக்கூடிய மார்க் அடிப்படையில் அவர்களுக்கான ரேங்க் வழங்கப்படும். நீங்கள் இப்போதே வாக்களிக்க விரும்பினால்.. இந்த மாதமும், அடுத்த மாதமும் வாக்களிக்க முடியும். ஏனென்றால் டிசம்பருடன் வாக்களிக்கும் வாய்ப்பு மூடப்படும்.
இது அவசியமான மற்றும் ஆக்கப்பூர்வமான நல்ல முயற்சி என்பதை உணர்ந்து அனைவரும் கை கொடுப்போம்.. ஓட்டிங்கிற்கு முன்னர் ஒரு ரேட்டிங்... நாளைய தலைமுறைக்கான கேரிங்
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications