வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர், வாக்குச்சாவடி, வண்ண அட்டை.. ‘கியூ ஆர்’ கோடு மூலம் அறியலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? உங்களுக்கு வண்ண அடையாள அட்டை வேண்டுமா, நீங்கள் வாக்காளிக்க வேண்டிய வாக்குச்சாவடி எது போன்ற சேவைகளை 'கியூ ஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம். எப்படி என்பதை பார்ப்போம்.

17வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையொட்டி 18வது லோக்சபா உறுப்பினர்களை தேர்வு செய்யும் நாடாளுமன்ற தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது.

You can find your name in the voter list polling station color card by QR code

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந் தேதி, 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ந் தேதி, 3ம் கட்ட தேர்தல் மே 7ந் தேதி, 4ம் கட்ட தேர்தல் மே 13ந் தேதி, 5ம் கட்ட தேர்தல் மே 20ந் தேதி, 6ம் கட்ட தேர்தல் மே 25ந் தேதி, 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒருபகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒருபகுதி, மேற்கு வங்காளத்தின் ஒருபகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. வருகின்றன. முந்தைய தேர்தல்களில் குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில், அதிக வாக்கு சதவீதம் பதிவாக வேண்டும் என்பதற்காக அங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கககாக பிரபலங்களை வைத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளம்பரம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு “உன் உரிமை, உன் கடமை, 18 வயது தொட்டால் துள்ளி குதிக்கும் மனமே” என்று தமிழில் தேர்தல் விழிப்புணர்வு பாடலை பாடி வெளியிட்டுள்ளார். வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் இந்த பாடல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

இதற்கிடையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? உங்களுக்கு வண்ண அடையாள அட்டை வேண்டுமா, நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி எது போன்ற சேவைகளை 'கியூ ஆர்' குறியீடும் அறியும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதும், அதில் திருத்தம் மேற்கொள்வதும் எளிதாக மாறி உள்ளது. வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றால் உங்களது ஓட்டு இங்கு இல்லை என்று இனி சொல்ல மாட்டார்கள்.. மேலும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா? என்பதனை கண்டுபிடிப்பதும் எளிது.

வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதனை https://electoralsearch.eci.gov.in/ தளத்தில் அறியலாம். அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது உங்கள் பெயருடன் பிறந்த தேதி மற்றும் தொகுதி அல்லது உங்கள் செல்போன் எண் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதேபோல் நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி மையம் பற்றியும் அறிய முடியும்.. https://electoralsearch.eci.gov.in/pollingstation என்ற இணையதளப்பக்கத்தில், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், உங்கள் வாக்குச்சாவடி மையம் எது? வாக்குச்சாவடி நிலை அதிகாரி, தேர்தல் பதிவு அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோரது பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களை அறியரலாம்.

அதேபோல் வாக்காளர் வண்ண அட்டை பெறுவதும் எளிதாக உள்ளது. https://voters.eci.gov.in/login என்ற பக்கத்தின் மூலம் உங்கள் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை எளிதாக டவுன்லோடு செய்யலாம். முதலில் உங்கள் செல்போன் எண் கொடுத்து பாஸ்வேர்டு பதிவு செய்ய வேண்டும் பின்னர், வாக்காளர் அடையாள அட்டை எண், செல்போன் நம்பர், இமெயில் என ஏதாவது ஒன்றை உள்ளீடு செய்து பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே சென்றால், ஒடிபி வரும், அதன் பின்னர் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோடு செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+