பட்டா, பத்திரம் தேவை இல்லை.. கிராமங்களில் வீடு, நிலத்தின் சர்வே எண்ணை ஈசியாக பார்க்கலாம்.. இதோ விவரம்
சென்னை: பட்டா, பத்திரங்கள் இல்லாமலேயே கிராமங்களில் உள்ள வீடு - நிலத்திற்கான சர்வே எண்ணை ஈசியாக தெரிந்துகொள்ளலாம். அதற்கான வில்லேஜ் மாஸ்டர் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. எப்படி பார்ப்பது போன்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
நிலம் வாங்குவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் பலரும் தங்கள் வாழ்நாள் சேமிப்பை மொத்தமாக கொண்டு நிலத்தில் முதலீடு செய்வார்கள். எனவே, வாங்கும் நிலத்தில் ஏதேனும் வில்லங்கங்கள் இருந்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும்.

சர்வே எண்: ஆகவே, நிலம் வாங்கும் முன்பே பிரச்சினைகள் எதுவும் இலலாததாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்வது வாங்குவது அவசியமாக இருக்கிறது. பொதுவாக ஒரு சொத்தின் அடையாளமாக சர்வே எண் இருக்கும். அரசின் வருவாய் பதிவேட்டில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சர்வே எண்ணும், அதன் உட்பிரிவு எண்ணும் இருக்கும். இந்த எண் தான் நிலத்தின் உண்மையான அடையாளமாக உள்ளது.
இதன் அடிப்படையில் தான் பத்திர பதிவு எல்லாமே இருக்கும். இந்த சர்வே எண்ணை பதிவு பத்திரங்கள் அல்லது பட்டா ஆவணங்கள் வழியாக நாம் தெரிந்து கொள்ள முடியும். சர்வே எண் இல்லை என்றால் நிலம் பற்றிய விவரங்களை நம்மால் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. சர்வே எண் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே பல்வேறு மோசடிகள் அரங்கேறவும் காரணமாக இருக்கிறது.
மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க: உதாரணத்திற்கு சொல்வது என்றால் ஒரு நிலத்தை காட்டி விட்டு வேறு ஒரு சர்வே எண்ணை கிரயம் செய்து கொடுத்து விடுவார்கள். இதனால், நிலம் வாங்குபவர்கள் மோசடி வலையில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். இத்தகய மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில்தான் தற்போது சர்வே எண்ணை வைத்து அந்த நிலம் யார் பெயரில் உள்ளது? எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருக்கிறது. நிலத்திற்கான வரைபடம் என அனைத்து விஷயங்களையும் மக்கள் ஈசியாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதள வசதி உள்ளது.
வெப்சைட் வெளியீடு: அந்த வகையில் தான், நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு தமிழ் நிலம் என்ற திட்டத்தின் கீழ் https://tngis.tn.gov.in/apps.html# - dashboar என்ற வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தை அறிமுகம் செய்து உள்ளது. கூகூள் மேப் போன்று அதில் உள்ள வரைபடம் வழியாக வீடு, நிலத்திற்கான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை மிக ஏளிதாக அறிந்து கொள்ள முடியும்.
அதன்பிறகு அந்த சர்வே எண்ணை https://eservices.tn. gov.in/ என்ற வெப்சைட்டில் பதிவு செய்து அந்த நிலத்தின் உரிமையாளர், நில அளவுகள் மற்றும் நிலத்தின் தன்மைகளை அறிந்து கொள்ள முடியும். தற்போது இந்த வெப்சைட்டில் கிராமப்புறங்களில் உள்ள வீடு மற்றும் நிலங்களில் உள்ள சர்வே எண் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். சிட்டிக்களில் உள்ள இடங்களுக்கு கொண்டு வரப்படவில்லை.
446 கோடி சர்வே எண்கள்: இதனால், நகர்புறங்களுக்கும் இந்த வசதி கொண்டு வரப்பட்டால் நில மோசடிகள் முற்றிலும் தடுக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது. தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையின் கணக்கீட்டின் படி கிட்டத்தட்ட 446 கோடி சர்வே எண்கள் உள்ளன. இதில் வில்லேஜ் மாஸ்டர் வெப்சைட்டில் கிராமப்புறங்களில் இருக்கும் சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவு எண்கள் மட்டும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமின்றி வில்லேஜ் மாஸ்டரில் நகர் பகுதி, கிராம பகுதி என தனித்தனியாக பிரித்து காண்பிக்கப்படுகிறது. சர்வே எண் தெரிந்து இருந்தால் வில்லேஜ் மாஸ்டரின் இடத்தின் எல்லை மற்றும் அருகில் உள்ள இடங்கள் விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
இன்னும் எளிதாக்க நடவடிக்கை: பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் போல கூகுள் மேப் போல இருக்கும் வில்லேஜ் மாஸ்டர் வரைபடத்தில் நமது இடம் எங்கு இருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்கவேண்டும். அதன் மூலம் சர்வே எண்ணை அறிந்து கொள்ளலாம். இதனை இன்னும் எளிதாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. நாம் நிற்கும் இடத்தை அப்படியே ஜிபிஎஸ் மூலமாக கூகுள் மேப்பில் கண்டறிந்து விட முடியும்.
இதேபோன்று வில்லேஜ் மாஸ்டருக்கு என்று அரசு ஒரு தனி செயலி கொண்டு வந்து, அதில் ஜிபிஎஸ் வசதியை கொடுத்து, நிற்கும் இடத்தின் சர்வே எண்ணை எளிதாக தெரிந்து கொள்ளும் வசதியை கொண்டு வந்தால் போலி சர்வே எண்ணில் நடைபெறும் மோசடிகளுக்கு முற்றிப்புள்ளி வைக்க முடியும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications