ரேஷன் கார்டு உள்ளவங்களுக்கு.. எதிர்பாராத சர்ப்ரைஸ்.. வீட்டில் இருந்தபடியே இதை பண்ணுங்க.. முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. வீட்டில் இருந்து கொண்டே ரேஷன் கார்டு உள்ளவர்கள் முக்கியமான சில மாற்றங்களை ஆன்லைன் மூலம் செய்ய முடியும்.

அதன்படி ரேஷன் கார்டில் விலாசம் மாற்றுவதற்கான அசத்தலான வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. இது தொடர்பான முக்கியமான விபரங்களை ஆன்லைன் வழியாக வெளியிட்டு உள்ளது.

Tamil Nadu Government Notification ration

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை ஆன்லைன் வழியாக எளிமையாக செய்ய முடியும். முக்கியமாக விலாசம் மாற்றுவதை ஆன்லைன் வழியாக செய்ய முடியும்.

பின்வரும் முறைகளை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக விலாசம் மாற்ற முடியும். தமிழ்நாடு மின்-பொது விநியோக அமைப்பு போர்ட்டலை இதற்கு பார்வையிட வேண்டும்.
https://www.tnpds.gov.in/home.xhtml

வலது புறத்தில் "ஸ்மார்ட் கார்டு சேவைகள்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
பின்னர் முகவரியை மாற்றுவதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
புதிய முகவரி தொடர்பான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்- பின் குறியீடு, மாநிலம், பகுதி பெயர் மற்றும் பல என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் TNEPDS உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும்.

1967, 1800-425-5901 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தமிழக ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற எத்தனை நாட்கள் ஆகும்?: முகவரிகளை மாற்ற அதிக நேரம் எடுக்காது. வழக்கமாக முகவரியைப் புதுப்பிக்க 15 முதல் 30 நாட்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு முகவரியை எவ்வாறு சரிபார்க்கலாம்? : தமிழ்நாட்டில் உங்கள் ரேஷன் கார்டு முகவரியை நீங்கள் சரிபார்க்கலாம். 1967-425-5901 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து, அங்குள்ள அதிகாரிகளிடம் உங்கள் முகவரியைத் தெரிந்துகொள்ளுங்கள். எனவே இது ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ஆன்லைன் செயல்முறையாகும்.

செயலி அறிமுகம்: இது போக தமிழ்நாடு அரசு சார்பாக TNePDS அலைபேசி செயலி என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் TNePDS என்ற அலைபேசி செயலி மூலம் புகார் பதிவு செய்தல், பரிவர்த்தனைகள், ஒதுக்கீடு, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள், நியாயவிலைக் கடைகளின் வேலை நேரம், நியாயவிலைக் கடையில் பொருட்கள் இருப்பு விவரம் மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் பின்னூட்டம் (Feedback) ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இச்செயலியை கீழ்காணும் லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

ஃடோல் ப்ரீ: ஏற்கனவே தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சில்லறை வாங்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்பட உள்ளனர். அதேபோல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை வாங்க நடத்துனரும் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.

சில்லறை: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சில்லறை வாங்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதன்படி Toll Free எண் 1800 599 1500ஐ தொடர்பு கொண்டு உங்கள் பயணச்சீட்டு விவரங்களை தெரிவித்து சில்லறைகளை UFI மூலமாக பெற்றுக்கொள்ளலாம். UNIFIED PAYMENTS INTERFACE வழியாக இந்த சில்லறை உங்களுக்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+