விசா இருந்தால்தான் இந்த ரயில்வே ஸ்டேஷனுக்குள் போக முடியும்.. இந்தியாவில் எங்கு இருக்கு தெரியுமா?
சென்னை: விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும். ஆனால் ரயில் நிலையத்திற்குள் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எளிதாக சென்றுவிட்டு வரலாம். பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் ரயில் நிலையத்தில் நடமாடினால் அபராதம் போடப்படும். ஆனால், இதையெல்லாம் தாண்டி, இந்தியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் விசா கட்டாயம் தேவைப்படும். இந்த ரயில் நிலையம் எங்கு உள்ளது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் சுமார் 7 ஆயிரம் ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. பொதுவாக ரயில்வே ஸ்டேஷன்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பிளாட்பார்ம் டிக்கெட் அல்லது பயண டிக்கெட் வைத்து இருக்க வேண்டும்.

இல்லையென்றால் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கினால் அபராதம் கட்டிவிட்டுத்தான் வர வேண்டும். இது இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பொதுவான நடைமுறைதான். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் விசா தேவை.. விசா இல்லையென்றால் இந்த ரயில் நிலையத்திற்குள் நீங்கள் செல்லவே முடியாது.
விமான நிலையத்திற்கு கூட விசா, பாஸ்போர்ட் இல்லாமல் போகலாம்.. ரயில்வே ஸ்டேஷனுக்குள் செல்ல விசாவா? என நீங்கள் நினைக்கலாம்.. இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. விசா இல்லாமல் செல்ல முடியாத ரயில்வே நிலையம் இந்தியாவில் எங்கு உள்ளது? அதற்கு காரணம் என்ன என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ளது அட்டாரி ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில், அட்டாரியில் இருந்து பாகிஸ்தானின் வாகா எல்லை வரை ரயில் இயக்கப்படுகிறது. அமிர்தசரஸ் - லாகூர் லைனில் இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் அட்டாரிதான். எனவே அட்டாரி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் விசா அவசியம்.
விசா இல்லாமல் இந்த அட்டாரி ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியாது.அதாவது பாகிஸ்தான் செல்வதற்கான விசா பெற்று இருக்க வேண்டும். இந்த விசா இன்றி யாரேனும் ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வளையத்திற்குள் இந்த ரயில் இருக்கும். பாகிஸ்தானின் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் இடமும் இந்த அட்டாரி ரயில் நிலையம்தான். தற்போது இந்த ரயில் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு இந்த சேவையும் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அட்டாரி ரயில் நிலையம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்து இருப்பதால் எப்போதுமே பதற்றம் நிறைந்த இடமாகும். இரு நாடுகளுக்கும் இந்த ரயில் நிலையம் வழியாக செல்ல முடியும் என்பதால் பாதுகாப்பு படையினரின் பலத்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications