ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்!
சென்னை: ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு சம்பாதித்த பணத்தில் 2 சொகுசு கார் மற்றும் 2 சொகுசு பங்களாவை யூடியூபர் மதன் வாங்கியிருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.
Recommended Video
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூடியூபில் லைவாக ஒளிபரப்பு செய்தவர் யூடியூபர் மதன். இவர் டாக்ஸிக் மதன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து தகாத வார்த்தைகளால் பேசி பதிவிட்டு வந்த மதன் மீது சமூகவலைதளங்களில் கண்டனங்கள் கிளம்பின. இதையடுத்து மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் இருந்து இரு புகார்கள் வந்தன.

செல்போன்
இதையடுத்து மதனை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவர் விபிஎன் சர்வரை வைத்து செல்போனை உபயோகித்து வருவதால் இவர் இருக்கும் இடத்தை கண்டறிவது சிக்கலாக உள்ளது.

மதனின் யூடியூப் சேனல்
இந்த நிலையில் மதன் மீது தமிழ்நாட்டில் இருந்து 159 புகார்கள் ஆன்லைன் மூலம் வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள். இதனிடையே நேற்றைய தினம் மதனின் மனைவி கிருத்திகாவை போலீஸார் கைது செய்தனர். மதனின் யூடியூப் சேனலுக்கு இயக்குநராக இருந்ததாக கிருத்திகா கைது செய்யப்பட்டார்.

2 சொகுசு கார்
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு பல கோடி சொத்துகளை மதன் வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. வீடியோ மூலம் ஒரு மாதத்திற்கு ரூ 7 லட்சம் சம்பாதிப்பதாகவும் தெரிகிறது. பப்ஜி வீடியோ வெளியிட்டு சம்பாதித்த காசில் 2 சொகுசு காரையும் 2 சொகுசு பங்களாவையும் அவர் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆஜர்
மதனுக்கு உதவியாக இருந்ததாக கைது செய்யப்பட்ட கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார்கள். அதே வேளையில் மதனை பிடிக்கும் முயற்சிகளையும் ஒரு புறம் முடுக்கி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications