மதுரவாயல் தொகுதியில் "சென்னை தமிழச்சியை" களமிறக்கிய கமல்ஹாசன்.. EIAவை தெறிக்கவிட்ட யூடியூபர்
சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயலில் போட்டியிடுபவர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து மத்திய அரசை கண்டித்ததோடு சரமாரியாக கேள்வி எழுப்பிய யூடியூபர் பத்மப்ரியாவை நினைவிருக்கிறதா? அவர்தான் போட்டியிடுகிறார்.
Recommended Video
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 136 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 98 இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் முதற்கட்டமாக 70 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்.
இவரது வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் ஐஏஸ் அதிகாரி, சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

யூடியூபர்
அதில் ஒருவர்தான் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பத்மப்ரியா. யார் இவர்? யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது யூடியூப் பெயர் சென்னை தமிழச்சி. இவர் தனது யூடியூப் சேனலில் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து இவரது வீடியோ வைரலானது.

மத்திய அரசுக்கு விமர்சனம்
இந்த வீடியோவில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்ததோடு கேள்விக் கணைகளை சரமாரியாக தொடுத்தார். இதனால் அவருக்கு தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள், மிரட்டல்கள், அரசியல் அழுத்தம் வந்தது. இதையடுத்து தனது வீடியோவை நீக்கிய அவர், எதற்காக நீக்கினார் என்ற விவரங்களையும் அளித்தார்.

மனஉளைச்சல்
இந்த வீடியோவால் எழுந்த விமர்சனங்களால் பத்மப்ரியாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் மனரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து வீடியோவை நீக்க முடிவு செய்ததாக தெரிவித்திருந்தார். மேலும் பாஜக தலைவர் கல்யாண், பத்மப்ரியாவின் சுயவிவரங்களை கேட்டு ட்வீட் அனுப்பியிருந்தார். மேலும் அவர் மீது கல்யாண் மோசமான கருத்துகளையும் முன்வைத்தார். இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பத்மப்ரியா
அத்தகைய வீரமிக்க சென்னை தமிழச்சியான பத்மப்ரியாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தவறுகளை தட்டிக் கேட்கும் பத்மப்ரியா மதுரவாயலில் பெரிய கட்சிகளுக்கு ஈடாக பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களுக்கு டார்ச் மூலம் "ஒளி" கொடுப்பாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications