மீனவர்களின் வளமும் நலமும் விற்பனைக்கு அல்ல.. கமல் கட்சி வேட்பாளரும் அவர் மாதிரியே பேசுறாங்கப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் குறித்து சாமானிய மக்களுக்கும் கடைக்கோடி மக்களுக்கும் ஏன் போய் சேருவதில்லை என யூடியூபரும் சமூக ஆர்வலருமான பத்மப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து யூடியூபரும் மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் சட்டசபை வேட்பாளருமான பத்மப்ரியா கூறுகையில் 112 சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு சமமான ஒரு பரப்பளவு காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

அது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணியினால் மீன் பிடித் தொழிலும் மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இப்போது அதானி குழுமம் 7 கி.மீ்ட்டருக்கு துறைமுகத்தை சுற்றி மீன் பிடிக்க தடை விதிக்குமாறு டேராடூனில் உள்ள நேஷனல் ஹைட்ரோகிராபிக் அலுவலகத்தில் கேட்டுள்ளது.

ஆயிரம் குடும்பம்

ஆயிரம் குடும்பம்

இது மட்டும் நடந்தால் பல ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமே இருக்காது. மீனவர்களும் பெண்களும் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். சில 100 பேருக்கு மட்டுமே வேலையை கொடுத்துவிட்டு மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆப்பு வைக்கிறார்கள்?

விலை போதல்

விலை போதல்

கார்ப்பரேட் கையில் விலை போகிறது என்பதை தாண்டி நமது மாநிலம் சுற்றுச்சூழல் ரீதியில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து சமூக ஆர்வலர்களும் அங்குள்ள உள்ளூர் மக்களும் மட்டுமே பேசி வருகிறார்கள். இந்த விஷயம் கடைக்கோடி மக்களுக்கு போய் சேருவதில்லை. ஏன் இவ்வளவு பாரபட்சம்?

விற்பனைக்கு அல்ல

விற்பனைக்கு அல்ல

எங்கள் மீனவர்களின் வளமும் நலமும் விற்பனைக்கு அல்ல. காட்டுப்பள்ளி மீனவர்கள் படும் கஷ்டம் ஏன் எல்லாருக்கும் போய் சேருவதில்லை என பத்மப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதி வேட்பாளரான பத்மப்ரியா ஒரு யூடியூபர், இவர் காட்டுப்பள்ளி விவகாரம் குறித்து மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்தும் பேசி வருகிறார்.

ஓட்டு விற்பனைக்கு அல்ல!

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம். ஓர் அட்டையில் "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என எழுதி வாசலில் மாட்டுங்கள். நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் என தெரிவித்திருந்தார். அது போல் பத்மப்ரியாவும் எங்கள் மீனவர்களின் வளம் விற்பனைக்கு அல்ல என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+