சின்னம் கிடைக்காது.. பரவாயில்லையா? விஜய்க்கு டெல்லி போடும் பிரஷர்.. ஒரே அடியாக வளைச்சிட்டாங்களே!
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தேர்தலை மையமாக வைத்து டெல்லி புதிய செக் ஒன்றை வைத்து உள்ளதாம். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அவர்கள் கேட்கும் சின்னம் கிடைக்காமல் போகலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜயுடன் கூட்டணி குறித்து பேச வேண்டும் என ஈபிஎஸ்-ஐ அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

அதிமுக கட்சி வட்டாரங்கள் மூலம் கிடைத்த தகவலின்படி, அமித் ஷா தனிப்பட்ட முறையில் ஈபிஎஸ்-க்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். விஜயை என்.டி.ஏ கூட்டணியில் சேர்ப்பது மிக முக்கியமான பணி என்று அமித் ஷா அப்போது வலியுறுத்தியுள்ளார்.
அமித் ஷா - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
ஏதாவது செய்யுங்கள்.. எந்த offer வேண்டுமானாலும் கொடுங்கள்.. விஜயை சம்மதிக்க வைத்து, தமிழக பாஜக, அதிமுக, மற்றும் TVK ஆகிய மூன்று கட்சிகளும் வரும் தேர்தலில் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யுமாறு ஈபிஎஸ்-க்கு அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள உள்ளூர் பிரச்சனைகளில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, இரு தலைவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்குமாறும் அமித் ஷா, ஈபிஎஸ்-ஐ கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு வைக்கப்படும் செக்
இன்னொரு பக்கம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தவெக அங்கீகரிக்கப்படாத கட்சி; அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோர முடியாது என தேர்தல் ஆணையம் வாதம் வைத்துள்ளது.
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, டிஜிபி பதில் தர ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க கோரிய அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
இதை மனதில் வைத்து.. விஜய்யிடம் பேசிய டெல்லி வட்டாரங்கள்.. நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஆளும் கட்சிகளை எதிர்க்க முடியாது. இங்கே பாஜக, அங்கே திமுகவை ஒரே நேரத்தில் எதிர்க்க நீங்கள் ஜெயலலிதா கிடையாது. உஷாராக இருங்கள். இப்பொது வழக்கில் வசமாக மாட்டிவிட்டீர்கள். கவனமாக இருங்கள். கோர்ட் உங்கள் மீது கோபத்தை காட்டிவிட்டது. டெல்லி சப்போர்ட் இல்லாள் நீங்கள் தாக்கு பிடிக்க முடியாது. கவனமாக இருக்கவும்.
உங்களுக்கு தேர்தல் நேரத்திலும் எங்கள் லாபி தேவை. நீங்கள் அங்கீகாரம் பெற்ற கட்சி கிடையாது. அப்படி இருக்க.. எப்படி ஆட்சிக்கு வர நினைப்பீர்கள்.. முதலில் உங்களுக்கு ஒரே சின்னம் கிடைக்குமா?
தமிழ்நாடு முழுக்க தொகுதிக்கு தொகுதி வேறு சின்னம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? அதை வாங்கவும் கோர்ட்டுக்கு செல்ல நேரிடும்.. இதற்குத்தான் டெல்லி லாபி தேவைப்படும். சின்னம் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அரசியலில் சின்னாபின்னம் ஆகிவிடுவீர்கள்.. மறக்க வேண்டாம் என்று விஜயிடம் டெல்லி கூறி உள்ளதாம்.
விஜய்க்கு டெல்லி செம வலை
இதை அடிப்படையாக வைத்தே விஜய் - பாஜக இடையே கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். விஜய் அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளார். விஜய்க்கு எதிராக கரூர் வழக்கு உள்ளது. இந்த வழக்கு விஜய்க்குத்தான் சிக்கல். விஜய் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார். மிக லேட்டாக கூட்டத்திற்கு வந்தது. அதோடு கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்று சில இடங்களில் காத்திருந்தார். அதன்பின் போலீஸ் சொன்ன அறிவுரைகளை கேட்கவில்லை. இதெல்லாம் ஒரு பக்கம்.
அதேபோல் விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின... இப்படி ரொக்கமாக வாங்கும் சம்பளத்திற்கு வரி காட்டாமல் விஜய் ஏமாற்றி உள்ளார் என்று வருமான வரித்துறை வாதம் வைத்துள்ளது. நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கை, வருமான வரித்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்காததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கும் விஜய்க்கு எதிராக உள்ளது.
இதை வைத்தே விஜய்க்கு டெல்லி செக் வைத்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications