Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலிடத்தில் முந்திக்கிட்டு 2025-ல் வந்த அயிட்டம்? இந்தியர்கள் கூகுளில் அதிகமாக தேடினது இதையா? அடடே

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 வருடம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது.. இந்த வருடம் எத்தனையோ முக்கிய நிகழ்வுகள் உலகில் நடந்துள்ளன.. உலகப் போர்கள், தங்கம் விலை உயர்வு, இயற்கை சீற்றங்கள், பிரபலங்களின் இழப்பு இப்படி பலவற்றை சொல்லலாம். ஆனால், இவ்வளவு இருந்தாலும்,. நம் மக்களின் ஆர்வம் எதன் மீது அதிகமாக இருந்தது என்பதை ஒரு பட்டியல் தெளிவாக காட்டிவிட்டது.. ஆம், கூகுளில் அதிகமாக எதை தேடினார்கள் என்பது தற்போது வெளியாகி அனைவருக்கும் சுவாரஸ்யத்தை தந்துள்ளது..

Indians Google search

AI மோகத்தில் இந்தியா!

முதலில் AI மோகம்தான் மக்களை கவ்வியிருக்கிறது எனலாம். கூகுளின் தேடல் பட்டியலில் 'ஜெமினி' அதாவது Google Gemini தான் முதலிடம் பிடித்திருக்கிறதாம்.. ஏஐ தொழில்நுட்பத்தின் மீது நம் மக்களுக்குள்ள ஆர்வம் இதன் மூலம் தெரியவருகிறது.. ஜெமினி ஏஐ போட்டோ, சாட் ஜிபிடி கிப்ளி ஆர்ட் படம், இப்படி ஏஐ தொடர்பான தேடல்கள் அதிகமாகி உள்ளன.


கிரிக்கெட் ஆர்வம்

அடுத்ததாக கிரிக்கெட்டை சொல்லலாம்.. இந்தியர்கள் இந்த ஆண்டும் கிரிக்கெட்டிலேயே கவனத்தை செலுத்தி உள்ளனர்.. முக்கியமாக ஐபிஎல் போட்டியை அதிகமாக தேடியிருக்கிறார்கள்.. வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்களின் தேடல்கள் முதல், தோனி 2026 ஐபிஎல்லில் விளையாடுவாரா? என்பது வரை கேள்விகளை கேட்டு தேடி உள்ளனர்.. பெங்களூரு அணி கப் எடுத்தது, இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வென்றது இப்படி பல விஷயங்களையும் நம் மக்கள் தேடி பார்த்துள்ளனர்.

நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டால், உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 'ஸ்க்விட் கேம்' என்ற சீரிஸ், இந்தியாவில் பிக் பாஸ் ஷோ போன்றவை கூகுளில் ஆதிக்கம் பெற்றுள்ளன....

டாப்பில் உள்ளது இட்லி

அடுத்ததாக சாப்பாடு.. அதிலும், இட்லி டாப்பில் உள்ளது.. வழக்கமாக தென்னிந்திய சாப்பாடு தோசை என்றால் ஃபேமஸ் என்றாலும், தேசிய கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புகள் எழுந்த சமயத்தில், இணையத்தில் முக்கியமாக இன்ஸ்டாவில் தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் விதத்தில் பாடல்களை வட இந்தியர்கள் ஷேர் செய்திருந்தனர்.. இந்த நேரத்தில்தான் இட்லியை அதிகம் பேர் தேடியிருக்கலாம் என்கிறார்கள்..

அடுத்தாக அதிகளவு தேடப்பட்ட உணவுகளில் 'Porn star martini' என்ற காக்டெயில் இரண்டாவது இடம் பிடித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது. வெண்ணிலா சுவை கொண்ட இந்தக் காக்டெயில், ஷாம்பெயினுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.

நம்ம ஊர் கொழுக்கட்டை

அடுத்து உகாடிச்சே மோடக் என்று சொல்லப்படும் டிஷ். இது வேறொன்றுமில்லை.. நம்ம ஊரில் செய்யப்படும் கொழுக்கட்டைதான்.. வட இந்தியாவில் இதற்கு உகாடிச்சே மோடக் என்கிறார்கள்.. விநாயகர் சதுர்த்தியின்போது இது அதிகம் தேடப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

அதேபோல உகாதி பண்டிகையின்போது செய்யப்படும் அறுசுவை உணவான உகாதி பச்சடி, சிவபெருமானுக்குப் படைக்கப்படும் திருவாதிரை களி மற்றும் தேக்குவா எனப்படும் இனிப்பு பிஸ்கட் இந்த லிஸ்ட்டில் டாப்பில் உள்ளன.. கோதுமை மாவில் வெல்லம், நெய், தேங்காய், ஏலக்காய், பெருஞ்சீரகம் சேர்த்து இந்த இனிப்பை செய்வார்கள்.

பீட்ரூட் கஞ்சி

ஆரோக்கிய உணவு தேடலாக 'பீட்ரூட் கஞ்சி' அமைந்துள்ளது.. பீட்ரூட்டுடன் கேரட் கடுகு, மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்படும் இந்த கஞ்சி 6வது இடத்தை பிடித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், 2025-ம் ஆண்டின் கூகுள் தேடல் அறிக்கை, இந்தியர்கள் தொழில்நுட்பத்தில் முன்னேற விரும்புகிறார்கள், கிரிக்கெட்டை கொண்டாடுகிறார்கள் என்பது தெரிகிறது. அதேசமயம், பாரம்பரிய உணவுகளை மறக்காமல் அதனை தேடிப்பிடித்து சாப்பிட்டு ரசிக்கிறார்கள் என்பதையும் இந்த லிஸ்ட் காட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+