அம்சா செய்த அட்டூழியம்.. ரூமுக்குள் நுழைந்த ஜோதி.. "எல்லாத்தையும் சொல்ல முடியல".. பரிதாப முடிவு

சென்னையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ம்மா.. எல்லாத்தையும் என்னால் சொல்ல முடியல.. நான் போகிறேன்... ஆனால் சாவுக்கு காரணம் அவங்கதான்" என்று தற்கொலைக்கு முன்பு, தன்னுடைய தாய்க்கு மகள் எழுதிய கடிதம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ.. 19 வயதாகிறது.. பிகாம் படித்துள்ளார்... இவருக்கும், திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் 5 மாசத்துக்குமுன்தான் கல்யாணம் நடந்துள்ளது.

பாலமுருகன் புதிதாக ஒரு வீட்டை கடன் வாங்கி இருக்கிறார்கள்.. அதனால், கல்யாணம் ஆகி வந்த ஜோதியிடம் பாலமுருகனும், அவரது அம்மா அம்சாவும் வீட்டு கடன் இருப்பதால், இன்னும் அதிகமாக வரதட்சணை பணம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஜோதியை கொடுமையும்படுத்தி வந்துள்ளனர்..

 தகராறு

தகராறு

இதுகுறித்து ஜோதிஸ்ரீ தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி உள்ளார்.. இதையடுத்து இரு வீட்டினரிடமும் பிரச்சனை வெடித்துள்ளது.. அதனால், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜோதிஸ்ரீ கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. அதாவது கல்யாணம் ஆகி 2 மாசம்தான் கணவன் வீட்டில் வாழ்ந்துள்ளார்.

 ஆத்திரம்

ஆத்திரம்

இந்தநிலையில் சம்பவத்தன்று, தன்னுடைய டிரஸ் மற்றும் சர்டிபிகேட்களை எடுப்பதற்காக ஜோதிஸ்ரீ, கணவர் வீட்டுக்கு வந்தார்.. ஜோதி வருவதை பார்த்த மாமியார் அம்சா, உடனே அவரை வீட்டுக்குள் வரவிடாமல் தடுத்ததாக தெரிகிறது.. எனினும் ஜோதிஸ்ரீ அவரையும் மீறி வீட்டின் மாடியில் உள்ள தன்னுடைய ரூமுக்குள் நுழைந்தார்.. அதை பார்த்ததும் அம்சாவுக்கு மேலும் கோபம் வந்துவிட்டது.. அதனால், ஆத்திரமடைந்த அம்சா, அந்த ரூமுக்கு போகும் கரன்ட்டை கட் பண்ணிவிட்டார்.

 சடலம்

சடலம்

இதனால் அதிர்ந்து போன ஜோதிஸ்ரீ, விரக்தி அடைந்து அந்த ரூமிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், ஜோதிஸ்ரீயின் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... அதன்பிறகு, அந்த ரூமை செய்தபோது ஜோதிஸ்ரீ தன்னுடைய அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.

 கல்யாணம்

கல்யாணம்

அதில், "ஏம்மா, நகை, பணத்துக்கு ஆசைப்படுபவருக்கு என்னை கல்யாணம் செய்து வெச்சீங்க? பணம், நகை இருந்தால்தான் உன்கூட வாழ்வேன்னு கணவர் சொல்கிறார்... நான் எல்லாத்தையும் சொல்ல முடியல.. நான் போறேன். ஆனால், எனது சாவுக்கு காரணம் என்னுடைய கணவரும், மாமியாரும்தான்... அவங்கள சும்மா விடாதீங்க" என்று எழுதி இருந்தது. இதையடுத்து, இந்த கடிதத்தின் அடிப்படையில், போலீசார் பாலமுருகன் அவரது அம்மா அம்சாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. மேலும் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+