தூக்கி வீசப்பட்ட 22 வயது மடோனா.. டூவீலரில் சென்றபோது எமனாக வந்த லாரி.. சென்னையில் சோகம்!
டூவீலர் மீது லாரி மோதி இளம்பெண் பலியானார்
சென்னை: லாரி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டார் மடோனா.. மார்பு, இடுப்பு பகுதியில் பலமான காயம் ஏற்பட்டு.. பரிதாபமாக உயிரிழந்தார்!
சென்னை வேளச்சேரி அருகே டூவீலரில் ஒரு இளம்பெண் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த வழியாக திடீரென ஒரு லாரி வேகமாக வந்தது.. எதிர்பாராத விதமாக பெண்ணின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இந்த விபத்தில் பெண்ணிற்கு மார்பு, இடுப்பு, வயிறு, தலையில் படுகாயம் ஏற்பட்டது.. கண் முன்னிலையிலேயே அந்த பெண் தூக்கி எறியப்பட்டு, கீழே விழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. ஆனால், தீவிரமான சிகிச்சை அளித்தும் இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. உயிரிழந்த பெண் ஆலந்தூரை சேர்ந்தவர், பெயர் ஷெர்லி மடோனா, வயது 22 என்பது தெரியவந்துள்ளது.
ஆனால், விபத்தை ஏற்படுத்திய லாரி பற்றின எந்த அடையாளமும் தெரியவில்லை என்பதால், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து லாரியையும், அந்த டிரைவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
அவங்க எங்க அம்மா.. நடுராத்திரி வேளச்சேரியில் டீ குடிக்க வந்த 2 பேர்! சென்னையில் மூதாட்டிக்கு கொடூரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications