கல்யாணம் பண்ண இஷ்டமில்லை.. மறுத்த காதலி.. கழுத்தை அறித்த காதலன்.. தற்கொலைக்கும் முயற்சி!
காதலியின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு காதலன் முயன்றார்.
Recommended Video

திருவொற்றியூர்: கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை என்று சொன்ன காதலியின் கழுத்தை இளைஞர் கழுத்தாலேயே அறுத்துவிட்டார். அதோடு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்தவர் பாரதி. 25 வயதாகும் பாரதி, டீச்சர் டிரெயினிங் முடித்துள்ளார். ஆனால் அதற்கான வேலை கிடைக்காமல், புதுவண்ணாரப்பேட்டையில் டூ-வீலர் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது கடைக்கு அடிக்கடி பாலாஜி என்பவர் வந்து போவார். அவர் அந்த கடையில் தனக்கு பைக் வாங்க வந்தபோதுதான் பாரதிக்கு ரொம்ப நெருக்கமாகி விட்டது. ரெண்டு பேரும் லவ் பண்ணார்கள். ஆனால் வரவர பாலாஜியின் நடவடிக்கைகள் பாரதிக்கு பிடிக்கவே இல்லை.

வீட்டுக்கு சென்றார்
அதனால் பேசுவதை குறைக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி பலமுறை பாரதியிடம் பேச முயன்றும், அவர் பிடி கொடுத்து பேசவே இல்லை. அதனால் ரெண்டில் ஒன்று கேட்டு விட வேண்டும் என்று நினைத்து நேற்றிரவு பாலாஜி பாரதியின் வீட்டுக்கே சென்றுவிட்டார்.

கழுத்தை அறுத்தார்
அந்தநேரம் பார்த்து வீட்டில் எல்லோரும் வெளியே போய் இருந்தார்கள். தனியாக இருந்த பாரதியிடம் தகராறு செய்தார். அப்போதும் பாரதி கல்யாணத்துக்கு ஒத்துக்கவே இல்லை. இதனால் பாரதியின் வீட்டு கிச்சனுக்கு போய் கத்தியை எடுத்து வந்து பாரதியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டார்.

தீவிர சிகிச்சை
சிறிது நேரம் கழித்து குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தால், ரத்த வெள்ளத்தில் இதில் ரத்த வெள்ளத்தில் பாரதி போராடி கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்கள்.

விஷம் குடித்தார்
இதனிடையே, வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து தப்பி வந்த பாலாஜி, நேராக ஒயின் ஷாப்புக்கு போனார். சரக்கு வாங்கி அதில் விஷத்தை கலந்து குடித்துவிட்டார். பிறகு நடுரோட்டிலேயே மயங்கி விழுந்தார். இதனை கண்ட திருவொற்றியூர் போலீசார் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது நடவடிக்கை
இப்போது பாரதிக்கு ஸ்டேன்லி அரசு ஆஸ்பத்திரியிலும், பாலாஜிக்கு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவருக்கு உடல்நிலை சரியான பின்பு கைது செய்ய காத்திருக்கிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications