எனக்கு விரல் நடுங்கும்ல.. தண்ணி அடிச்சாதானே நடுங்காது.. அப்பத்தானே சரியா ஓட்டு போட முடியும்.. ஆஹா
டாஸ்மாக் கடை ஏன் மூடறீங்க என்று இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
சென்னை: "ஏன் கடை மூடறே.. தண்ணி அடிச்சாதான் என்னால கரெக்ட்டான பட்டனை பார்த்து அமுக்க முடியும்.. இல்லேன்ன ஓட்டு தப்பா குத்திடுவேன்.. பரவாயில்லையா?" என்று தேர்தல் ஆணையரையே ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.. அதுவும் தண்ணி அடித்துவிட்டு!
மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதனால், தமிழகம் முழுவதும் இன்று முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தேர்தலின்போது எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ
இந்நிலையில், மதுப்பிரியர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். அதுவும் டைரக்டா தேர்தல் ஆணையரை பார்த்தே ஒரு கேள்வி கேட்டுள்ளார். இதனை வீடியோவாக பேசி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அந்த இளைஞர் நடிகர் ராஜ்கிரண் போல லுங்கியை தூக்கி மடித்து கட்டிக் கொண்டு பேசுகிறார். தண்ணி அடித்துவிட்டு பேசினாலும் நிறுத்தி நிதானமாக கேள்வியை எழுப்புகிறார். அதில் குடிமகன் சொல்வதாவது:

கடை ஏன் லீவு?
"நான் வந்து.. எனக்கு வந்து.. குடிக்கலைன்னா கை நடுக்கம் வந்துடும்.. நீங்க எலக்சனுக்கு மூனு நாள் லீவு வுடறீங்க. லீவு வுடறதனால உங்களுக்கு என்ன பெனிபிட் இதனால? எங்களுக்கு விரல் நடுக்கம் ஆகும். இதனால நாங்க கரெக்ட்டான பட்டனை பார்த்து அமுக்க முடியாது. மாத்தி அமுக்கிட்டா, நாங்க நினைக்கிற சின்னத்துக்கு போட முடியாது. எங்களுக்கு குடிச்சாதான் கரெக்டான சின்னத்தை போட முடியும். நீங்க ஏன் கடையை லீவு விடறீங்க?
உங்களுக்கு அரசியல் தெரியுமா? அப்போ பதில் சொல்லுங்க.. பாஸ் பண்ணிட்டா கெத்துதான்!

கை படபடன்னு உதறும்
கடை லீவுக்கும், எலக்ஷனுக்கும் என்ன சம்பந்தம்? இதை சொல்லுங்க முதல்ல. தேர்தல் கமிஷனர், அதிகாரியை பார்த்து நான் கேள்வி கேட்கறேன். நீங்க கடையை நடத்துங்க. தேர்தல் ஒரு பக்கம் நடக்கட்டும். இல்லேன்னா கை படபடன்னு அடிச்சு வேறு சின்னத்துல குத்திட வேண்டி வரும்.

அதிகாரி யாரு
இதுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க? தேர்தல் அதிகாரி யாரு.. இதுக்கு பதில் சொல்லுங்க. என்னை மாதிரி உள்ள குடிகார சங்கம், பல்லாயிரக்கணக்கானவங்க சார்பாக கேட்கிறேன், இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?" என்றார்.
முடியலண்ணே முடியலை!
-
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
தமிழகத்தில் ஏன் கள் விற்கக் கூடாது? டாஸ்மாக்கில் மது விற்கிறீர்களே? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications