வந்தா 2 கிட்னியோட வா, கட்டிக்கலாம்.. கறார் காதலன்.. அதிர்ச்சி அடைந்த காதலி.. போலிஸில் புகார்!
ஏமாற்றிய காதலன் மீது இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: "2 கிட்னியோடு வந்தால்தான் கல்யாணம்" என்று கறாராக காதலன் சொல்லி விட்டதால் போலீசில் புகார் அளித்துள்ளார் இளம்பெண்.
சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா. இவருக்கு வயது 32. நித்யாவுக்கு ஒரே ஒரு கிட்னிதான் உள்ளது.
பிறவியிலேயே இந்த குறை இருந்தாலும் நித்யாவுக்கு 4 வருடத்திற்கு முன்புதான் வீட்டில் இந்த உண்மையை சொல்லி உள்ளார்கள். இந்தநிலையில், இரண்டு வருடத்திற்கு முன்பு விக்னேஷ் என்ற 29 வயது நபர் நித்யாவுக்கு அறிமுகமாகி உள்ளார். நாளடைவில் நித்யாவை அவருக்கு பிடித்து போக கல்யாணம் செய்துகொள்வதாக வந்து சொல்லி இருக்கிறார்.

ஒரே ஒரு கிட்னி
ஆனால் விக்னேஷ் வயதில் சிறியவர் என்பதால் இதற்கு நித்யா மறுத்துள்ளார். எனினும் வற்புறுத்தியதால் அவரது காதலை ஏற்றுள்ளார். அப்போது தனக்கு வலது பக்கத்தில் மட்டும் கிட்னி இருப்பதாகவும், இது தனக்கு பிறவி குறை என்றும் கூறினார்.

குடும்ப செலவு
இதையடுத்து கடந்த வருடம் இரு வீட்டிலும் காதலை சொன்னதன் பேரில், பெற்றோர்களும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தினார்கள். ஆனால் நித்யாவின் தந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டதால் செலவு குடும்பத்தை நெருக்கி உள்ளது.

20 சவரன் நகை
இந்தநிலையில் விக்னேஷ் வீட்டில் ஏற்கனவே போட்ட நகை இல்லாமல் மேலும் 20 சவரன் நகை அதிகமாக வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு பெண் வீட்டில் மறுப்பு சொன்னதாகவும் தெரிகிறது. பிரச்சனை இங்கிருந்துதான் வெடித்துள்ளது. இப்போது நிச்சயமான நிலையில், இரண்டு கிட்னியோடு வந்தால்தான் என்று விக்கேஷ் சொல்லுகிறாராம்.

இரண்டு கிட்னி
இதனால் விரக்தி அடைந்த நித்யா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருக்கிறார். நிச்சயமான நிலையில் விக்னேஷுடன் நெருங்கி பழகினேன் என்றும், இப்போது கிட்னியை காரணம் காட்டி வேண்டாம் என்பதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications