நச்சரிச்சே ஒன்னா இருந்த போட்டோவை நெட்டில் விட்டுடுவேன்.. காதலியை மிரட்டிய சென்னை டாக்டருக்கு வலை
சென்னை: சென்னையில் இளம்பெண் ஒருவருடன் பழகி திருமண ஆசை காட்டி மோசடி செய்த மருத்துவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.
சென்னை எண்ணூரை சேர்ந்த 28 வயது பட்டதாரி பெண். இவருக்கு 2019 ஆம் ஆண்டு தண்டையார்பேட்டையை சேர்ந்த ஒரு மருத்துவர் சபரிமோகனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சென்ற போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் காதலமாக மாறியது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து நெருங்கி பழகியுள்ளனர். மேலும் இருவரும் வாட்ஸ் ஆப் மூலம் சாட்டிங் செய்துள்ளனர். வீடியோ கால் போட்டு பேசியுள்ளனர்.
எல்லாவற்றுக்கு மேல் லாங் டிரைவ் செல்லும் அளவுக்கு இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவே உறுதி அளித்து மருத்துவர் நெருக்கமாக இருக்கத் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் அண்மைக்காலமாக அந்த பெண்ணிடம் மருத்துவர் பேசுவதையே குறைத்துவிட்டாராம்.
நாளடைவில் அந்த பெண்ணுடன் பழகுவதையும் பேசுவதையும் சுத்தமாக நிறுத்திவிட்டதால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அந்த மருத்துவரை அந்த பெண் நேரில் சந்தித்து பேசிய போதுகூட அந்த பெண்ணிடம் அதிகமாக பேசவில்லை. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மறுத்த மருத்துவர், இப்படியே என்னை தொல்லை செய்தால் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என பிளாக்மெயில் செய்துள்ளார். இந்த விவகாரம் எல்லை மீறியது. இதனால் அந்த பெண் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதற்குள் அந்த மருத்துவர் வேறு ஒரு பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இளம் பெண் தன்னிடம் இருந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள், ஆடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை போலீஸாரிடம் ஆதாரமாக கொடுத்துள்ளார். மருத்துவர் தனது திருமண வாழ்க்கை கெட்டு விடுமோ என்ற அச்சத்தில் விசாரணையை முடக்க அந்த மருத்துவர் 10 லட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளதாக பெண் தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.
அந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து மருத்துவர் மீது மோசடி, ஏமாற்றுதல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள மருத்துவர் சபரி மோகனை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications