புருஷனை பயமுறுத்த அனிதா செய்த "அந்த" காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்!
உடலில் தீப்பிடித்து இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
சென்னை: புருஷனை பயமுறுத்துவதற்காக சும்மா விளையாட்டுக்கு மண்ணெண்ணெய்யை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரை சேர்ந்தவர் அனிதா. இவர் மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்ற இளைஞரை காதலித்து, பின்னர் இரு வீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணமும் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் மதுரவாயல் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

அனிதாவின் தந்தை 5 மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டதால், தனியாக இருக்கும் தன் தாயுடன் கடந்த சில தினங்களாக தங்கி வந்துள்ளார். அப்போது, வினோத்குமார் தினமும் குடித்துவிட்டு அனிதாவிடம் தகராறு செய்து வந்ததாகவும், இதனால் அனிதா வினோத்குமார் மீது கோபத்திலும் வருத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. .

இந்நிலையில், தான் தற்கொலை செய்து கொள்வது போல, கணவரை பயமுறுத்தி மிரட்டினால் இனி அவர், தண்ணி அடிக்க மாட்டார் என்று நினைத்தார் அனிதா. அதற்காக தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போல நடித்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக, அனிதா உடலில் திடீரென தீப்பிடித்து கொண்டது. இதைபார்த்து அலறிய வினோத்குமார் உள்ளிட்ட, பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அனிதாவை மீட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அனிதா ஒரு வார கால தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், அது பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications