பாத்ரூமில் பிணமாக கிடந்த பிங்கி.. கொலையாளி யார்.. முக்கிய தடயம் சிக்கியதாக தகவல்.. சென்னையில் பகீர்
சென்னையில் வடமாநில பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்துள்ளனர்
சென்னை: வீட்டின் பாத்ரூமில் இளம்பெண் பிங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது சம்பந்தமாக 3 பேரிடம் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிங்கி. வயசு 30. இவரின் கணவர் உத்தம் மண்டேல். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர்.
பிங்கி ஒரு தொழிலதிபர்.. நல்ல வசதி.. அண்ணாநகரில் குடியிருந்து வந்தார். சேலை விற்பனை செய்து வந்தார். மேலும் டாட்டூ வரைதல் வேலையும் பார்த்து வந்தார்.

பாத்ரூம்
கணவரை பிரிந்து வாழும் பிங்கியுடன் 26 வயசு இளைஞர் ஒருவர் தங்கி இருக்கிறார். இந்நிலையில், வெளியே சென்றிருந்த அந்த இளைஞர், வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பாத்ரூமில் பிங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

விசாரணை
இதை பார்த்து அதிர்ந்து போன இளைஞர், உடனடியாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் சொன்னார். விரைந்து வந்த போலீசார், பிங்கியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.

அடையாளம்
முதல் வேலையாக பிங்கியின் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை கொண்டு ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் பேர் பிங்கியின் வீட்டுக்குள் சென்று, சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர்கள் யார் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அதனால் அவர்கள் 2 பேர் மற்றும் பிங்கியின் வீட்டிலேயே தங்கி இருந்த அந்த இளைஞர் என 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. இதை தவிர பிங்கியின் செல்போனையும் ஆராய்ந்து வருகிறார்கள்.

கொலை
பண விவகாரத்துக்காக இந்த கொலை நடந்துள்ளதா, அல்லது பிரிந்து வாழும் கணவர் தரப்பில் இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது வீட்டிலேயே தங்கியிருந்த அந்த நபர்தான்பிங்கி கொலையில் சம்பந்தப்பட்டுள்ளாரா, என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை
ஆனால் முக்கிய தடயம் ஒன்று சிக்கி உள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் பாத்ரூமில் பிங்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அண்ணா நகர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications