சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?.. ரஜினியை விமர்சிப்பவர்களை தோல் உரிக்கும் இளம் எழுத்தாளர்

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? என ரஜினியின் அரசியல் வருகையை விமர்சிப்பவர்களை தோல் உரித்து காட்டுகிறார் இளம் எழுத்தாளர் அஷ்வின்.

இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலான டேக் 1 டேக் 2 டேக் 3 என்ற சேனலில் அவர் கூறியிருப்பதாவது: ரஜினி சார் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து, ரசிகர்கள் கருத்து என பார்த்தோமேயானால் 1996 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற ஒரு கேள்வி மக்கள் மனதில் இருந்து கொண்டிருக்கிறது.

1996-இல் ரஜினி ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பலம் இருந்தது. அதன் பிறகு நாளடைவில் பொதுமக்கள் அவர்களுடைய கருத்துகளை முன் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது சமூகவலைதளங்கள் வந்தவுடன் பொதுமக்கள் கருத்துகளை முன் வைத்தார்கள்.

நாங்கள் கையில் எடுத்திருப்பது மாற்று அரசியல்.. போர்க் குண அரசியல் அல்ல.. கமல்ஹாசன் விளக்கம் நாங்கள் கையில் எடுத்திருப்பது மாற்று அரசியல்.. போர்க் குண அரசியல் அல்ல.. கமல்ஹாசன் விளக்கம்

எதிர்மறை

எதிர்மறை

சில கருத்துகளை அவரை பற்றி நேர்மறையாக வந்தாலும் பல கருத்துகள் அவரை சுற்றி நெகட்டிவாகவே வருகிறது. ரஜினி சாரை நாம் நடிகர் என்பதை மறந்துவிட்டோம். அரசியலுக்கு வருகிறார் என்ற காரணத்தை வைத்து அவரை நாம் ஏன் ட்ரோல் செய்ய வேண்டும்? அவர் அடிமட்டத்திலிருந்து எந்த வித சினிமா பேக்கிரவுண்டும் இல்லாமல் சாதித்த கடின உழைப்பாளி.

மோசமான நிலை

மோசமான நிலை

அவரிடம் எப்போதும் எளிமை அப்படியே இருக்கிறது. ஒருவர் மேல் இருக்கக் கூடிய அன்பு இன்னொருவர் மேல் வெறுப்பாக மாறக் கூடாது. இதை பொது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். உலகம் தற்போது மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அனைவரிடத்திலும் போட்டி, பொறாமை இருக்கிறது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

போர் வரும் போது வருவேன்னு சொன்னார், பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பதாக கூறினார், ஜனவரியில் கட்சியை தொடங்க போவதாகவும் அவர் கூறியிருக்கிறார். விஜயகாந்த் அவர்கள் நடிகராக இருந்துதான் அரசியலுக்குள் வந்தார். அது போல் ஜெயலலிதா மேடமும் நடிகையாக இருந்து பின்னாளில் அரசியலுக்கு வந்தார்கள்.

விமர்சனம்

விமர்சனம்

ரஜினி சார் அரசியலுக்கு வருகிறார், இல்லை வரவில்லை என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. இதை நாம் ஏன் ட்ரோல் செய்ய வேண்டும்? கருத்து சுதந்திரம் என்பது ஆரம்ப காலத்திலிருந்தே இருக்கிறது. உங்களுடைய கருத்துகளை நீங்கள் பதிவு செய்யலாம். அதை எப்படி பதிவு செய்றீங்க என்பதுதான் முறை. நாகரீகமாக செய்ய வேண்டும். ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்னால் நமக்கு அந்த தகுதி இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

ரஜினிக்காக இல்லை

ரஜினிக்காக இல்லை

ஒருவரை பற்றி விமர்சிக்கும் முன்னர் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். நான் இதை ரஜினி சாருக்காக மட்டும் சொல்லவில்லை. அவரை புகழ்வதற்காகவும் இந்த வீடியோவை போடவில்லை. நடுநிலையோடுதான் செய்கிறேன். இன்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும், இன்னார் வரக் கூடாது அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

தவறு இல்லை

தவறு இல்லை

மக்களுக்கு சேவை செய்கிற மனம் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாமே. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் பிற்காலத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை சாதிக்கத்தான் போகிறது. ரஜினி சாரின் அரசியல் எப்படித்தான் இருக்கிறது என்பதை பார்க்கலாமே, அதில் ஒரு தவறும் இல்லையே என்கிறார் அஸ்வின்.

English summary
Young Writer Ashwin says about Rajini's Political Entry. He also slams those who trolls Rajinikanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X