சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோயில்ல கும்பிட்டாதான் சாமி.. தியேட்டர்ல பார்த்தா தான் மாஸ்டர்.. அஸ்வினின் அதிரடி ஸ்டேட்மென்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: கோயில்ல கும்பிட்டாதான் சாமி, தியேட்டர்ல பார்த்தா தான் மாஸ்டர் என இளம் எழுத்தாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டேக் 1 டேக் 2 டேக் 3 யூடியூப் சேனல் வைத்திருக்கும் அஸ்வின் கூறுகையில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயமாகும். தியேட்டர்கள் 10 மாதங்களாக மூடியிருக்கிறது.

தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் சினிமா துறையில் கொண்டு வருவதற்காக இரண்டு பெரிய படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸாகின்றன. முன்னணி நடிகர்கள் தங்களுடைய படம் தியேட்டரில்தான் ரிலீஸாக வேண்டும் என்ற ஒரு முடிவை எடுத்துள்ளார்கள்.

ரிலீஸ்

ரிலீஸ்

மாஸ்டருடைய ரிலீஸை வைத்து மக்கள் தியேட்டர்களுக்கு வருவதை வைத்து தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்கள் படங்களை தியேட்டரில் வைத்துதான் ரிலீஸ் செய்வேன் என காத்து கிடக்கிறார்கள். எந்த ஒரு ரசிகனாக இருந்தாலும் தியேட்டருக்கு போய் படம் பார்க்கவே விரும்புவான்.

ஆரவாரம்

ஆரவாரம்

1970, 80, 90 களில் கூட தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதையே மக்கள் விரும்பினார்கள். தன்னுடைய ஹீரோவின் படத்தை தியேட்டரில் உட்கார்ந்து விசில் அடித்து கைதட்டல்களுடன் ஆரவாரம் செய்து பார்ப்பதையே அனைவரும் விரும்புகிறார்கள். இப்படியிருக்கையில் ஓடிடி எனும் புதிய கலாச்சாரம் அண்மைக்காலமாக வளர்ந்து நிற்கிறது.

எளிதாக வசூல்

எளிதாக வசூல்

தியேட்டர் கலாச்சாரத்தை கொண்டு வர விஜய், சிம்பு ஏன் வலியுறுத்தினார்கள் என்றால் தியேட்டரில் துப்புரவு பணியாளர்கள், வேலை செய்யும் ஊழியர்கள் என அவர்களுடைய வாழ்வாதாரம் 10 மாதங்களாக கேள்விக்குறியாகிவிட்டது. 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்ற போது வசூலை எடுக்க முடியாது. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி எனும் போது எளிதாக வசூலை எடுத்துவிடலாம்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ஜெகமே தந்திரம் உள்ளிட்ட படங்களில் நிறைய பொருட் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்தால்தான் வருமானம் என்பது கிடைக்கும். தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தால் முதல் நாள் முதல் காட்சி பார்ப்போரும், ரசிகர்களும் எப்படியாவது தியேட்டர்களுக்கு வந்துவிடுவார்கள். தியேட்டரில் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டாலும் அரசு கூறிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டியது நமது கடமை. எனவே ரசிகர்கள் கூட்டமாக போகும் போது முகக் கவசம் அணிந்து கைகளில் கிளவுஸ் போட்டுக் கொண்டு பாதுகாப்பாக படம் பாருங்கள் என்றார் அஸ்வின்.

English summary
Young Writer Ashwin says that 100% occupancy is good for theatre staffs but with safety measures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X