Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டார் ஹோட்டலில் போலீஸ் நுழைந்ததுமே எகிறி குதித்த இளைஞர்கள்.. சிக்கிய இளம் பெண்கள்.. பகீர் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதைப்பொருள் பயன்பாடு நடைபெற்றதாக ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, கொச்சி மாநகர போலீஸ் அதிரடி சோதனை நடத்தி பெரும் போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளது. இந்தச் சம்பவம் கொச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அப்படி என்ன தான் நடந்தது?

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு மிகப்பிரபலமான நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் அரங்கேறிய போதை பார்ட்டி சம்பவம் இப்போது ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உலுக்கி எடுத்துள்ளது.

Kochi drug party bust

கொச்சி மாநகர போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த மின்னல் வேக அதிரடி சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்தர போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சமூகத்தின் முக்கிய புள்ளிகள் பலரும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

கொச்சி ஸ்டார் ஓட்டல்

நடந்த சம்பவத்தை விவரமாக பார்ப்போம்.. கொச்சியின் கடவந்தரா பகுதியில் அமைந்துள்ளது அந்த பிரபலமான ஸ்டார் ஓட்டல்.. அங்கு ஒரு ரகசியமான தனியார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

இந்த நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அதில் பெரும் பணக்கார வீட்டு வாரிசுகள் பங்கேற்றுள்ளதாகவும் போலீஸ் கமிஷனருக்கு நள்ளிரவில் ஒரு ரகசிய போன் கால் வந்தது.. இதையடுத்து கடவந்தரா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையிலான பெரும் போலீஸ் படை அந்த ஓட்டலை அதிரடியாக சுற்றி வளைத்தது..

போலீஸ் வாகனங்கள் ஓட்டல் வளாகத்திற்குள் நுழைந்ததை கண்டதும் அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயத்தில் ஆடிப்போய்விட்டார்கள். போலீசார் உள்ளே நுழைந்த வேகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் சிலர், தப்பித்து ஓட முயற்சி செய்து ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளில் இருந்து கீழே குதித்தனர். இதில் சில இளைஞர்கள் ஓட்டல் சுவர் ஏறி குதித்து இருட்டில் தப்பியோடி மறைந்தனர்.. இதனால் அந்த ஸ்டார் ஓட்டல் வளாகமே ஒரு போர்க்களம் போல காட்சியளித்தது..

Kochi drug party bust

போலீஸ் அதிரடி சோதனை

இருந்தாலும் போலீசார் ஓட்டலின் அனைத்து நுழைவு வாயில்களையும் அதிரடியாக பூட்டிவிட்டு, உள்ளே இருந்த ஒவ்வொரு ரூமையும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்..

இந்த அதிரடி சோதனையின்போது அங்கு கொக்கைன், கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போன்ற மிக வீரியமான போதைப்பொருட்கள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.. குறிப்பாக சில முக்கிய நபர்களிடம் இருந்து 10 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.. விசாரணையில், இந்த நிகழ்ச்சிக்கு திட்டமிட்டே வெளியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்து பயன்படுத்தியது போலீசாருக்கு உறுதியானது..

சிக்கிய பெண் டாக்டர்

இந்த விவகாரத்தில் திருவனந்தபுரம் சங்கமுகம் பகுதியைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷாஜி பெர்னாண்டோ உட்பட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்..

இதில் முக்கியமாக கலூர் பகுதியைச் சேர்ந்த ஆஸ்டின் ஜோஸ், வக்கீல் ரோஹித் நாயர், கொடுங்கல்லூர் ஜினோ முரளி, ஆலப்புழா அக்பர் ஷா ஆகியோர் அடங்குவர்.. மேலும் இந்த போதை கும்பலில் இருந்த பிரபல பல் டாக்டர் பென்சி ராவுத்தர், கொல்லம் பகுதியைச் சேர்ந்த சையத் அலி பாத்திமா மற்றும் கல்லூரி மாணவர் அமல் ரவுப் ஆகியோரையும் போலீசார் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்கள் என்பதும், அவர்கள் அனைவரும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் என்பதும்தான் இந்த சம்பவத்தின் முக்கிய ஹைலைட்டாகும்.

இரவு நேர பார்ட்டி

இவர்கள் அனைவரும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.. இவர்கள் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்து, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று ஆராய்ந்து வருகின்றனர்..

இதற்கிடையே, இந்த போதை பார்ட்டிக்கு தேவையான போதைப்பொருட்களை மொத்தமாக விநியோகம் செய்த எர்ணாகுளத்தை சேர்ந்த ஷோன் என்பவர், போலீசார் வருவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்துவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார்.. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தற்போது தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மற்றொரு விஐபி நிகழ்ச்சியிலும் இதுபோன்ற போதைப்பொருள் பயன்பாடு இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இப்போது ஓட்டல் நிர்வாகத்திற்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்று சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.. சொகுசு ஓட்டல்களில் இது போன்ற கலாச்சாரம் பெருகி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தற்போது இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் கைது சம்பவம் கேரளா மட்டுமின்றி தமிழக எல்லைப் பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. போலீசார் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்களாம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+