Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலில் வாக்களிக்க வாருங்கள்.. இளைஞர்கள் அரசியலை வழிநடத்த வேண்டும்.. கமல்ஹாசன் பேச்சு!

இளைஞர்கள் அரசியலை வழி நடத்த வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத்தில் இருப்பவர்களின் சராசரி வயது 54ஆக இருப்பதை கலைய வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசிய கமல்ஹாசன், மாணவர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 42ஆம் ஆண்டு கல்லூரி விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், கிறிஸ்தவ கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். அறிவுரை கூற வரவில்லை, அனுபவத்தை தெரிவிக்க வந்துள்ளேன்.

 கமல்ஹாசன் பேச்சு

கமல்ஹாசன் பேச்சு

இந்த விழாவில் அதிக நேரம் பேசுவதை விட, உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். நான் வந்தது எனக்கு திறமை இருக்கிறது என நீங்கள் நினைப்பதால்தான். ஒவ்வொருவருக்கும் வேற வேற வாழ்க்கை லட்சியம் இருக்கும். எனது வாழ்க்கையை பெற்றோர் முடிவு செய்யவில்லை. நானும் அவர்களுக்காக முடிவு எடுக்கவில்லை. வாழ்க்கையில் எல்லா பந்துகளிலும் சிக்சர் அடிக்க முடியாது. அதனால் பாதையை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

அரசியலில் இளைஞர்கள்

அரசியலில் இளைஞர்கள்

நமது இந்திய மக்களின் சராசரி வயது 29. ஆனால் நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் சராசரி வயது 54. இதனை கலைய வேண்டும். மாணவர்கள் வாக்களிக்க வர வேண்டும், அரசியல் உங்களை வழிநடத்தக் கூடாது. நீங்கள் அரசியலை வழி நடத்த வேண்டும். 100 சதவிகிதம் மாணவர்கள் வாக்களித்தால் அவர்களை நான் தோளில் தூக்குவேன். வாக்கு எனக்கு போடுங்கள் என்று நான் கேட்க வரவில்லை என்று தெரிவித்தார்.

காதலும், கலையும்

காதலும், கலையும்

அதேபோல், கண்ணாடியை பார்க்க வேண்டும், உங்களை நீங்கள் நேசியுங்கள். உங்கள் குணாதிசயங்களை நேசியுங்கள். கலையும் காதலும் அவசியம். தோல்வி, சோதனை வரும் என பயம் என்றால் சிறிது நேரம் தூங்கி விடுவேன். போருக்கு செல்வதற்கு முன்பு தூங்கி அதன் பிறகு கிளம்பி செல்வேன். ஒரு மொழி புரிந்து விட்டால் அம்மொழியினரையும் புரிந்து கொள்ளலாம்.

இயக்குநராகவே வந்தேன்

இயக்குநராகவே வந்தேன்

நான் சினிமாவில் இயக்குநராகவே பணியாற்ற வந்தேன். அதனை மடை மாற்றி விட்டவர் இயக்குநர் கே.பாலசந்தர். எனக்கு சினிமாவுக்கு அடுத்தது அரசியல் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். நான் கிறிஸ்தவ கல்லூரியில் பேஷன் டிசைனிங் ஸ்டூடியோ திறந்தேன். அதற்கு எனக்கு அருகதை இருக்கிறது. காரணம் நான் காதி உடை அணிகிறேன் என்று தெரிவித்தார். முன்னதாக விழாவில் கமல்ஹாசன் ஆங்கிலத்தில் பேசிய தொடங்கிய போது, மாணவர்கள் அனைவரும் தமிழ் தமிழ் என்று சத்தம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தமிழில் பேசியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+