அன்புமணி ராமதாஸுக்கு பகிரங்க மிரட்டல்.. ஆபாசமாக பேசி வீடியோ.. 19 வயது இளைஞர் கைது
அன்புமணி ராமதாஸ்-க்கு டிக்-டாக் மூலம் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: "தில் இருந்தா எங்க ஏரியால காலை வை பாக்கலாம்" என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ்-க்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் சர்க்கார் பட பேனர் விவகாரத்தில், விஜய் ரசிகர்கள் 2 பேர் அருவருப்பாக பேசி வீடியோ வெளியிட்டார்கள். அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் கடந்த 23 ம் தேதி டிக்-டாக் என்ற ஆப் மூலம் மற்றொரு வீடியோ வெளியானது. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பற்றி அந்த டிக்டாக் ஆப்பில் ஒரு இளைஞர் அவதூறாக பேசியிருந்தார்.

கூலி வேலை
3 வீடியோக்கள் அதில் உள்ளன. எல்லாவற்றிலும் ஒரே இளைஞர்தான். அவர் பெயர் வினோத். வயது 19 ஆகிறது. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர். அதே பகுதியில் கூலி வேலையும் செய்து வருகிறார்.

முழுசா கேட்க முடியல
இவர் அந்த வீடியோவில் ஒரு பக்கம் அம்பேத்கரை புகழ்வதைவிட, அன்புமணி இராமதாஸ் பற்றி மிகவும் கீழ்தரமாகவும், வன்னியர் ஜாதியை பற்றி தவறாகவும் பேசியுள்ளார். பேச்சு முழுவதும் கெட்ட வார்த்தைகள்தான். காது கொடுத்து ஒரு வரியை கூட முழுசா கேட்க முடியவில்லை.

இதுதான் என் நம்பர்
"என் போன் நம்பர் இதுதான், முடிஞ்சா வந்து பிடி பார்க்கலாம், நான் புளியந்தோப்புலதான் இருக்கேன், தில் இருந்தா கால் வை பார்க்கலாம்" என சகட்டுமேனிக்கு அவதூறாக பேசி உள்ளார். இந்த டிக் - டாக் பேச்சு படு வைரலாக தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசில் புகார்
இது பாமக தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆபாசமாக பேசிய வினோத் என்பவரின் இணையதள முகவரியை கண்டறிந்த பாமகவினர், இளைஞர் குறித்த பல விவரங்களை திரட்டி கொடுத்து, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி புளியந்தோப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

சிறையில் அடைத்தனர்
இந்த புகாரின் அடிப்படையில் புளியந்தோப்பு போலீசார், வினோத் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அம்பேத்கர் புகழ்??
இப்படித்தான் சமீபத்தில் பிற ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்வோம் என்று அம்பேத்கர் படம் முன்பு சிலர் உறுதி மொழி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். அம்பேத்கர் புகழைப் பரப்பாவிட்டாலும் கூட பரவாயில்லை, இது போல அம்பேத்கருக்கு அவமானம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டாலே போதும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications