வெங்காயத்தை சாப்பிடுங்க.. சாப்பிடாம போங்க... இளைஞர் காங். நூதனப் போராட்டம்
சென்னை: வெங்காயத்தை அதிகம் தாம் உணவில் சேர்ப்பதில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நூதனப் போராட்டம் நடத்தினர்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுகிறாரா, சாப்பிடவில்லையா என்பது இங்கு முக்கியமில்லை என்றும், அதன் விலை உயர்வால் மக்கள் படும் அவஸ்தையே முக்கியம் எனவும் கூறுகிறார்கள் இளைஞர் காங்கிரஸார்.
சென்னையில் வெங்காயத்தை தட்டில் வைத்து இலவசமாக விநியோகித்து நூதனப் போராட்டம் நடத்தியுள்ளது இளைஞர் காங்கிரஸ்.

காங். எதிர்வினை
வெங்காயம், பூண்டு, உள்ளிட்டவைகளை தாம் அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இலவச வெங்காயம்
சென்னை செம்பாக்கத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹசன் மவுலானா, ஜெபி மாத்யூ ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு இலவசமாக வெங்காயத்தை வழங்கி, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நூதனப் போராட்டம் நடைபெற்றது.

எதிர்ப்பு
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுகிறாரா சாப்பிடவில்லை என்பது நாட்டிற்கு முக்கியம் இல்லை என்றும், பொறுப்புள்ள ஒரு நிதி அமைச்சரிடம் இருந்து இது போன்ற பதிலை நாடு எதிர்பார்க்கவில்லை எனவும் இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஜெபி மாத்யூ தெரிவித்துள்ளார்.

போராடுவோம்
மலைபோல் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெங்காயம் விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸார் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் எனவும் கூறுகிறார் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஹாரூன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications