எடப்பாடி ஐயா... காதலர் தினத்தன்று லாக்டவுன் போடுங்க.. முரட்டு சிங்கிளின் "ஸ்டொமக் ஃபயரிங்" டிமான்ட்!
சென்னை: காதலர் தினத்தன்று lock down போடுங்கள் என முதல்வர் பிரச்சாரக் கூட்டத்தில் முரட்டு சிங்கிள் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளது நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் இந்த கலாச்சாரம் இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது.
இத் தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொள்வார்கள். இதனால் சுற்றுலா தளங்கள், கடற்கரைகள், சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மாநகராட்சி பூங்காக்கள் என காதலர்கள் கூட்டம் களைகட்டும்.

உற்சாகம்
கொரோனா வைரஸ் தொற்றால் சமூக இடைவெளி, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஒரு வருடமாக காதலர்கள் சந்தித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது வைரஸ் தொற்று பெருமளவு குறைந்து உள்ளதால் நாளை காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த உற்சாகத்துடன் காதலர்கள் உள்ளனர்.

டேக் இட் ஈஸி
எந்த இடங்களிலும் விட்டு வைக்காமல் ஜோடிகள் தங்கள் காதலை வளர்ப்பார்கள். இதை பார்த்து காதல் செட்டாகாத இளைஞர்களின் வயிற்றில் இருந்து கருகும் வாசமும் வரத்தான் செய்யும். என்ன செய்வது நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான் என நினைத்து சிலர் டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்வார்கள்.

முரட்டு சிங்கிளின் யோசனை
இது போல் காதலி இல்லாத ஆண்களையும் பெண்களையும் முரட்டு சிங்கிள்கள் என கிண்டலுக்காக அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் முரட்டு சிங்கிளாக உள்ள இளைஞர் ஒருவர், நாங்கள் ஒத்தையாக இருக்கும் போது நீங்கள் மட்டும் எப்படி காதலர் தினத்தை கொண்டாடுவீர்கள் என்பதை பார்ப்போம் என நினைத்து கொண்டு என்ன செய்யலாம் என யோசித்தார்.

வைரல்
அப்போது அவரது மனதில் உதித்தது ஒரு ஐடியா. தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். முதல்வர் பிரச்சாரத்தின் போது ஒரு இளைஞர் ஐயா காதலர் தினத்தன்று லாக்டவுன் போடுங்கள் என கேட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சிரிப்பலை
வீடியோவை மேலும் சுவாரஸ்யமாக்க இணையவாசி ஒருவர் முரட்டு சிங்கிளின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று முதல்வர் சொல்வது போல எடிட் செய்து மீண்டும் இணையத்தில் பரப்பி உள்ளனர். இவ்விரு வீடியோக்களும் இணையத்தில் சிரிப்பு அலைகளை ஏற்படுத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications