"எனக்கு வாழ பிடிக்கலை.. என் உடலை பிரேத பரிசோதனை செய்யாதீர்".. தற்கொலை கடிதத்தில் ராமாபுரம் இளைஞர்
சென்னை: தன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம் என சென்னை ராமாபுரத்தில் இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை ராமாபுரம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அர்ஜூன் (23). பெற்றோர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில் அர்ஜூன் தனியாக வசித்து வந்தார்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் இன்று மாலை சுமார் 6 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜன்னல் வழியாக
அவரை பார்க்க் வீட்டிற்கு சென்ற நபர் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது அர்ஜூன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் தொங்கிய அர்ஜூனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாழ பிடிக்கவில்லை
அவர் தங்கியிருந்த வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், "எனக்கு வாழ பிடிக்கலை. எல்லோரும் இருந்து நான் தனியாக இருப்பது போல் ஃபீல் பன்றேன். என்னால வாழ முடியல. என் வாழ்க்கை இப்படியே இருக்கு, அதனால தா நான சாக போறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இப்படிக்கு நான் என எழுதியுள்ளார்.

கடிதத்தில் கடைசி ஆசை
என்னுடைய கடைசி ஆசை என் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். அப்படியே எனது உடலை பெற்றோரிடம் ஒப்படையுங்கள் என எழுதி வைத்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

அர்ஜூன் தூக்கிட்டு தற்கொலை
மேலும் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்ததில் அர்ஜூனுக்கு சரிவர வேலை இல்லாததும் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் இன்று மாலை வீட்டுக்கு வந்து சென்ற பின்னர்தான் அர்ஜூன் தூக்கிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

காதல் தோல்வியால் தற்கொலையா?
அர்ஜூன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீஸார் அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications