நல்ல வேளை வண்டியை ஓரம் கட்டிய ராஜசேகரன்.. கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. படுகாயம்
சென்னை: சென்னையில் 3 வயது குழந்தை மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த வடு மறைவதற்குள் மீண்டும் மாஞ்சாநூல் அறுத்து இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சென்னை கொருக்குப்பேட்டையில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து கோபால் என்பவரின் 3வயது மகன் அபினேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் மற்றொரு சம்பவம் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடந்துள்ளது.

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் வயது 25. இவர் மருந்துகளை விற்கும் பிரதிநிதியாக உள்ளார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கொடுங்கையூரில் இருந்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் வழியாக இருசக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்தார்.
கன்னிகாரபுரம் மாநகராட்சி திடல் அருகே வந்த போது ராஜசேகரனின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது. இதனால் சுதாரித்த அவர் ஒரு கையால் மாஞ்சாநூலை பிடித்து வண்டியை ஓரமாக நிறுத்தினார். கழுத்து அறுபடுவது தாமதமாகிய நிலையிலும் அவரது கழுத்தில் இரத்தம் வந்தது.
இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார், காற்றாடி விட்ட 12 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவனை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications