Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாத்ரூம் பக்கத்தில் கிடந்த சரஸ்வதியின் சடலம்.. நடுங்கி போன கள்ளக்குறிச்சி.. என்னதான் நடந்தது..?

பெண்ணை கொன்ற இளைஞர் உட்பட 3 பேர் கைதானார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை மட்டுமே கல்யாணம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அவ்வளவுதான் என்று மிரட்டிய 21 வயது காதலன், இளம்பெண் சரஸ்வதியின் கழுத்தை நெரித்து கொன்றே விட்டார்.. பாத்ரூம் பக்கத்திலேயே அந்த சடலத்தையும் வீசிவிட்டு தப்பிய நிலையில், 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளது போலீஸ்.

கடந்த ஒரு வாரமாகவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதற்குதான் டாக்டர் ராமதாஸ் முதல் தலைவர்கள் கொந்தளித்தனர்.

"காதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்வதை விட மோசமான காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியாது.. இவர்களுக்கு சட்டப்படியாக அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் " என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருந்தார். இதையடுத்து, இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமம் தேவியானந்தல்.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான் சரஸ்வதி.. 18 வயதாகிறது.. நர்ஸிங் படித்து கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி விடிகாலை இவர் வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூம் அருகே முள்புதரில் சடலமாக கிடந்தார்... இதையடுத்து திருநாவலூர் போலீசார், சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்..

சரஸ்வதி

சரஸ்வதி

அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், சரஸ்வதியின் கழுத்து இறுக்கமாக நெரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிரடியாக விசாரணையை துவக்கினர் போலீசார். அப்போதுதான் சரஸ்வதியின் காதல் பற்றி தெரியவந்துள்ளது.. காதலன் பெயர் ரங்கசாமி.. 21 வயதுதான் ஆகிறது.. சரஸ்வதி இறந்ததுமே இவர் எஸ்கேப் ஆகியிருந்ததும் தெரியவந்தது.. அதனால், இவரை தேடினால்தான், இந்த கொலையின் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படும் என்ற நம்பிக்கையில், போலீசார் வலையை விரித்தனர்..

டவர்

டவர்

ரங்கசாமியின் செல்போன் டவரை வைத்து அவரை தீவிரமாக தேடினர்.. அப்போதுதான், அவர் ஆந்திரா பார்டரில் ஒளிந்து கொண்டிருப்பது தெரியவந்தது.. உடனடியாக அங்கு கிளம்பி சென்ற போலீசார் ரங்கசாமியையும், அவரது நண்பர் ரவீந்திரன், மற்றும் 17 வயது சிறுவனையும் பிடித்து வந்தனர்.. 3 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான் அந்த பகீர் தகவல்களும் வெளியே வந்தன.

டிகிரி

டிகிரி

சரஸ்வதி பண்ருட்டியில் உள்ள ஒரு நர்ஸிங் ஸ்கூலில்தான் படித்து முடித்து டிகிரி வாங்கி உள்ளார்.. அதே ஊரை சேர்ந்த ரங்கசாமியும் சரஸ்வதியும் ஒருத்தருக்கொருத்தர் விரும்பி உள்ளனர்.. அடிக்கடி சரஸ்வதியுடன் பேசுவதற்காக, ரங்கசாமி ஒரு செல்போனும் காதலிக்கு வாங்கி தந்துள்ளார். இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரியவந்தது.. ஆளுக்கு ஒரு பக்கம் கொந்தளித்தனர்.. காரணம் 2 பேருமே வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.. அதிலும் சரஸ்வதி வீட்டில் பயங்கரமான எதிர்ப்பு எழுந்தது...

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

அவசர அவசரமாக மாமன் மகனுக்கு சரஸ்வதியை பேசி முடித்து நிச்சயம் செய்தனர். இந்த விஷயம் ரங்கசாமிக்கு தெரிந்துவிட்டது.. இதனால் காதலர்களுக்குள் தகராறு வெடித்தது.. தன்னை தவிர வேறு ஒருவரை எப்படி கல்யாணம் செய்ய சம்மதிக்கலாம் என்று ஆவேசமாகி உள்ளார் ரங்கசாமி.. இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவை சோஷியல் மீடியாவில் வெளியிட போவதாகவும் மிரட்டி உள்ளதாகவும் தெரிகிறது.

தகராறு

தகராறு

இது தொடர்பான தகராறு மறுபடியும் வெடித்துள்ளது.. ஏப்ரல் 2ம் தேதி நடுராத்திரி சரஸ்வதியை சந்திக்க ரங்கசாமி சென்றுள்ளார்.. அப்போது, துணைக்கு நண்பர்கள் ரவீந்திரன், 17 வயது சிறுவனை அழைத்து சென்றுள்ளார்.. இருவரையும் சற்று தொலைவில் நிறுத்தி விட்டு, வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதர் பக்கத்தில், சரஸ்வதியுடன் தகராறில் ஈடுபட்டார்..

பாத்ரூம்

பாத்ரூம்

ஆனால், சரஸ்வதியோ, தன் அம்மா, அப்பா பேச்சை மீற போவதில்லை என்று திட்டவட்டமாக சொல்லவும், ஆத்திரமடைந்த ரங்கசாமி, சரஸ்வதியின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொன்றே விட்டார்.. சடலத்தை பாத்ரூம் பக்கத்தில் போட்டு விட்டு தப்பி சென்றும்விட்டார்.. இவ்வளவும் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரங்கசாமி, நண்பரை கைது செய்த போலீசார் 17 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தது. பல்வேறு பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்திய இந்த கொலையின் அதிர்வு இன்னமும் முழுமையாக நீங்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+