மாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...!
தாய்மாமனை இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்
Recommended Video
சென்னை: "மாமா.. இப்படி பேசாதே.." என்று சொல்லி சொல்லி பார்த்தார் கோகுல்ராஜ்.. ஆனால், 60 வயது தாய்மாமனுக்கு வாயை திறந்தாலே கூவம்தான்.. தன் அம்மாவை அசிங்க அசிங்கமாக திட்டியதால், கருங்கல்லை கொண்டே தாய்மாமனை அடித்து கொன்றுவிட்டார் கோகுல்ராஜ்!
சென்னை ஆலந்தூர், ஆசர்கானா பகுதியில் வசித்து வரும் தம்பதி சவுந்தராஜன் - சரஸ்வதி. இவர்களுக்கு 31 வயதில் கோகுல்ராஜ் என்ற மகன் உள்ளார். ஒரு தனியார் கொரியர் ஆபீசில் வேலை பார்க்கிறார்.
கோகுல்ராஜின் தாய் மாமன், அதாவது சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ். இவருக்கு அப்புன் என்று இன்னொரு பட்ட பெயர் உண்டு. 60 வயசு குடிகாரன்.

தங்கை
தண்ணி போட்டுவிட்டால், தங்கை, தாரை தெரியாது.. நடுத்தெருவில் நின்று கொண்டு திட்ட ஆரம்பித்துவிடுவார். இது கோகுல்ராஜுக்கு சங்கடத்தை தந்தது.. அதனால் பலமுறை மாமா, இப்படியெல்லாம் பேசாதீங்க என்று சொல்லி உள்ளார். ஆனாலும் தாய்மாமன் பேச்சு அவமானத்தையே தந்தது.

தாய்மாமன்
இப்படித்தான் வழக்கம்போல் தண்ணி அடித்துவிட்டு நடுராத்திரி வந்தார் எத்திராஜ். ரோட்டில் நின்றுகொண்டு, தங்கையை ஆபாசமாகப் பேசி திட்டியதுடன், கூடவே அவரது குடும்பத்தையும் இழுத்து வந்து கேவலப்படுத்தி பேசினார். இதனால் ஆத்திரம் மண்டைக்கேறிய கோகுல்ராஜ், தாய்மாமனை சரமாரி அடித்து, அங்கிருந்து கிளம்பி செல்லும்படி சொன்னார்.

நிறுத்தவில்லை
ஆனாலும், எவ்வளவு அடி வாங்கினாலும், தாய்மாமன் அங்கிருந்து நகர்ந்து போகவே இல்லை.. கெட்ட வார்த்தைகளால் தங்கையை திட்டுவதையும் நிறுத்தவே இல்லை.. இதனால் பொறுமை இழந்த கோகுல்ராஜ் கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து எத்திராஜ் முகத்தில் கடுமையாக தாக்கிவிட்டார்.

கைது
இதில், தாய்மாமன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.. அங்கேயே துடிதுடித்தும் இறந்துவிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் பரங்கிமலை போலீசுக்கு தகவல் அளிக்கவும், விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, கோகுல்ராஜையும் கைது செய்தனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications