ஆழ்துளை கிணற்றை சுற்றி கூட்டம்.. தலைகீழாக உள்ளே இறக்கப்படும் இளைஞர்.. ஒரு பாசிட்டிவ் மெசேஜ்!
இளைஞர்கள் துளையில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்கிறார்கள்
Recommended Video
சென்னை: ஆழ்துளை கிணற்றை சுற்றி இளைஞர்கள் பதற்றத்துடன் நிற்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இது எந்த ஊர் என்று தெரியவில்லை. ஒரு ஆழ்துளை கிணற்றினை சுற்றி இளைஞர்கள் கூடிஉள்ளனர். உள்ளே யார் விழுந்துவிட்டார்கள், யாருக்கு என்ன ஆச்சோ என்று தெரியாத அளவுக்கு ஒரு பரபரப்பு தோன்றுகிறது.
பிறகுதான் குழிக்குள் விழுந்தது ஒரு ஆட்டுக்குட்டி என்று தெரிகிறது. இந்த குழி இருப்பதை பார்க்காமல் அந்த ஆட்டுக்குட்டி இதற்குள் விழுந்திருக்கிறது. அந்த குழியை பார்த்தால், ஆட்டுக்குட்டி எப்படி உள்ளே போனது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு சிறியதாக இருக்கிறது.

இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் ஒன்றுதிரண்டு ஆட்டுக் குட்டியை வெளியே எடுக்க முயற்சிக்கிறார்கள். 4 பேர் சுற்றி நிற்க, ஒருவர் மட்டும் அந்த குழிக்குள் தலையை உள்ளே நுழைக்கிறார். அவரது 2 கால்களையும் வெளியே நண்பர்கள் இறுக்க பிடித்து கொள்கிறார்கள். நடுநடுவே ஆட்டுக்குட்டியிடம் இருந்து ஏதாவது சத்தம் வருகிறதா என்று குழிக்குள் காதை வைத்து கேட்டு கொண்டே இருக்கிறார்கள்.
தலைகீழாக உள்ளே போன இளைஞர், வெளியே வரும்போது ஆட்டுக்குட்டியுடன் வருகிறார். அந்த வெள்ளாட்டுக்குட்டி எல்லாரையும் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டே அங்கிருந்து ஓடுகிறது. அந்த ஆட்டுக்குட்டி விழுந்தது சின்ன குழிதான் என்றாலும், இளைஞர்கள் உயிருடன் வெளியே கொண்டு வர போராடுகிறார்கள்.
சுஜித்தை பறிகொடுத்த நிலையில் நாம் தவித்து வரும்போது, இப்படி ஒரு வீடியோ வந்துள்ளது. இது எப்போது நடந்த சம்பவம் என்றுகூட தெரியவில்லை. இது இப்போது வைரலாகியும் வருகின்றனர். ஆனால், சுஜித் இறந்தபிறகு, எந்த உயிரினம் குழிக்குள் மாட்டிக் கொண்டாலும், இனி நம் மக்கள் துணிந்து காப்பாற்றி விடுவார்கள் என்று மட்டும் தெரிகிறது!
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications