பிரஸ் மீட்டில் விஜய் போட்டோவை இளைஞர் காட்டிய விவகாரம்.. பாஜக வானதி சீனிவாசன் கொடுத்த பதிலை பாருங்க
சென்னை: பாஜக வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தபோது பின்னால் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தவெக தலைவர் விஜயின் புகைப்படத்தை கேமரா முன்பு காட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு வானதி சீனிவாசன் அளித்த பதிலை பார்க்கலாம்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். வானதி சீனிவாசன் ஆவேசமாக பேட்டியளித்துக் கொண்டு இருந்த போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், தனது செல்போனில் தவெக தலைவரும் நடிகருமான விஜயின் புகைப்படத்தை கேமரா முன்பு காட்டினார்.

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இது குறித்து வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
நானும் இந்த வீடியோவை பார்த்தேன்.. நிறைய பேர் இந்த வீடியோவை இன்ஸ்டாவில் போட்டிருந்தாங்க.. இதுக்கு நான் என்ன சொல்ல முடியும்.. ரொம்ப டிரெண்ட் ஆக இன்ஸ்டா, எக்ஸ் தளத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நாங்க எந்த அளவுக்கு இதனை அனுமதிக்கிறோம் என்று பாருங்கள். கருத்து சுதந்திரத்தை பாஜக அனுமதிக்கிறது. இன்னொருவர் வந்து புகைப்படத்தை பின்னாடி வந்து காட்டும் அளவிற்கு கருத்து சுதந்திரத்தை நாங்க அனுமதிக்கிறோம்.
ட்ரோல், மீம்ஸ், காமெடி என எந்த மெசேஜ் ஆக வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம். இதே மாதிரி இன்னொரு கட்சியில், இந்த விஷயத்தை இந்த பக்கம் நின்று பண்ண முடியுமா?.. என்று பாருங்கள். அப்போ யாரு பாசிசம், யாரு கருத்து சுதந்திரம், யாரு சட்டம் என்றெல்லாம் தெரியவரும். மீம்ஸ் எப்படி என்றாலும் போடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்திக்கும் போது, பெட்ரோல் விலை உயர்வை பற்றி பேசிய ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக அப்போது பேசப்பட்ட தகவல் குறித்து பேசிய வானதி சீனிவாசன், யாரையும் எங்க கட்சிக்காரர்கள் அடித்து இருக்க மாட்டாங்க.. அப்படி அடிக்கிற ஆட்களையா நாங்க கட்சியில வச்சிருக்கோம். 6 வருடத்துக்கு முன்பு இது நடந்ததாக சொல்றீங்க. அப்போதும் நாங்க தான் ஆட்சியில் இருந்தோம். இப்போதும் நாங்க தான் இருக்கிறோம். ஆனால் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும் போது ஒரு தம்பி வந்து வேறுஒருவரது புகைப்படத்தை காட்டுகிற அளவுக்கு எல்லாரையும் மதிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், கங்குவா படம் இன்னும் நான் பார்க்கவில்லை. ஒரு படத்தை பார்க்கும் போது ஒவ்வொருக்கும் ஒரு கருத்து வரும். இதில் நான் என்ன சொல்வது. விஜய்க்கு அரசியல் வரவேற்பு அதிகமாக இருப்பதாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், 'சினிமாவில் இருந்து வந்து கட்சி ஆரம்பித்தவர்கள் நிறைய பேர் இருக்காங்க. இதில் சில பேர் சாதித்து இருக்கிறார்கள். நிறைய பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். சினிமாவுக்கும், தமிழக அரசியலுக்கும் நீண்ட கால தொடர்பு இருப்பதால் இந்து சாதாரணம் தான்' என்றார்.
-
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
டெல்லி புறப்பட்டார் விஜய்! நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications