சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்பாடா.. தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டும் தமிழ்நாட்டு இளைஞர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 18 வயது மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

Recommended Video

    Corona தடுப்பூசி போட்டுக்க இளைஞர்கள் ஆர்வம்! தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்

    இதில் இளைஞர்கள் அதிகளவில் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

     மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின் மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின்

    இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.

    தடுப்பூசி

    தடுப்பூசி

    சென்னையில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாமில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தடுப்பூசி போடப்படுகின்றது. இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

    இளைஞர்களிடையே ஆர்வம்

    இளைஞர்களிடையே ஆர்வம்

    தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் பேசுகையில், கொரோனா என்ற சங்கிலியை உடைப்பதற்கு தடுப்பூசி என்ற ஆயுதமே சரியானது. இளைஞர்களான எங்களுக்கும், எங்கள் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட கூடாது என்பதற்காகவும் தடுப்பூசி போட்டுக்கொண்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    திமுகவின் முகாம்கள்

    திமுகவின் முகாம்கள்

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி ராயப்பேட்டையில் உள்ள பார்டர் தோட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பலரும் ஆர்வமாக வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    கிழக்குக் கடற்கரை சாலையில்

    கிழக்குக் கடற்கரை சாலையில்

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் 18 முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    English summary
    In Tamil Nadu, more Youths come forward to take Covid vaccines.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X