அதிமுக இளைஞர்கள் திரண்டு வந்து ஆதரவு! சளைக்காமல் செல்ஃபி எடுத்து அனுப்பும் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உள்ள இளைஞர்கள் இந்தளவுக்கு திரண்டு வந்து தனது பக்கம் நிற்பார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமியே எதிர்பார்க்கவில்லையாம்.

அந்தளவுக்கு கடந்த 3 நாட்களாக அதிமுகவில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு நல்கி வருகிறார்கள்.

இனி எதிர்காலம் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை யூகித்து இந்த ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.

ஓபிஎஸ் ஆதரவாளர்

ஓபிஎஸ் ஆதரவாளர்

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஓபிஎஸ் பக்கம் தான் இளைஞர்கள் நிற்பதாகவும் ஆதாயம் தேட முயற்சிப்பவர்கள் தான் எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்வதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் தன்னை சந்தித்து ஆதரவு தெரிவிக்க வருபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருந்ததை கண்டு எடப்பாடி பழனிசாமி மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறாராம்.

கட்சி நிர்வாகிகள்

கட்சி நிர்வாகிகள்

கட்சி நிர்வாகிகள் தனது பக்கம் வருகிறார்கள் என்றால் அது அரசியல் கணக்கின் அடிப்படையில் பதவிகளை எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால் இளைஞர்கள் இந்தளவுக்கு நம் மீது நம்பிக்கை வைத்து வரத் தொடங்கியிருப்பது நிச்சயம் கட்சியை வலிமைப்படுத்தும் என புளங்காகிதம் அடைகிறாராம் இபிஎஸ். இதனால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு இளைஞர்களும் இளம் நிர்வாகிகளும் ஆதரவு அளிக்கும் காட்சிகளை நியூஸ் ஜே தொலைக்காட்சியில் கூட திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறார்களாம்.

எடப்பாடி மாஸ்

எடப்பாடி மாஸ்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு இணையாக இல்லாவிட்டாலும் தனிப்பெரும் தலைவராக தன்னை எடப்பாடி பழனிசாமி அடையாளப் படுத்திக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசி பேட்டிகள் கொடுக்காமல் அவர் பொறுமை காத்ததன் பின்னணியில் ஒரு பெரிய கன்சல்டிங் டீமே இருக்கிறதாம். அதன் படி நடந்ததால் தான் இன்று அவருக்கு ஆதரவு அலை பெருகியதற்கு ஒரு காரணமாம்.

Recommended Video

    ADMK பொதுக்குழு: MGR பாணியில் EPS! *Politics | OneIndia Tamil
    புகைப்படம்

    புகைப்படம்

    தன்னை சந்தித்து ஆதரவு தெரிவிக்க வரும் நிர்வாகிகள் ஆர்வக்கோளாறில் செல்ஃபி எடுக்க முயன்றால் சலிக்காமல் நின்று அதற்கும் போஸ்கொடுத்து அனுப்பி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் இளம் நிர்வாகிகள் என்றால் உரிமையுடன் தோளில் தட்டி வரவேற்று தனக்கான இமேஜை உயர்த்திக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+