அண்ணாமலை, நித்தியானந்தா Fact check வீடியோ.. டெலிட் செய்த யூடியூபர்! காற்றில் பறக்கும் கருத்துரிமை?
சென்னை: விரதம், புற்றுநோயை கொல்லுமா? என்கிற தலைப்பில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சையும், கல்வி குறித்து நித்தியானந்தா பேசியதையும் விளக்கி MR.GK எனும் யூடியூபர் வீடியோவை பதிவிட்டிருந்தார். ஆனால், இந்த வீடியோ அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டதாக யூடியூபர் கூறியிருந்தது சோஷியல் மீடியாக்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சோஷியல் மீடியாக்களில் சில அபூர்வமான பக்கங்கள் இருப்பதுண்டு. அதில் ஒன்றுதான் இந்த MR.GK யூடியூப் சேனல். அறிவியல் கருத்துக்களை சாமானிய மக்களுக்கும் புரியும் விதத்தில், எளிமையாக கொண்டு சேர்க்கும் வேலையை இந்த சேனல் செய்து வருகிறது. சில உண்மை சரிபார்ப்பு வீடியோக்களும் இதில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், அண்ணாமலை மற்றும் நித்தியானந்தா பேசிய கருத்துக்கள் Fact check செய்யப்பட்டிருந்தன.

என்ன பிரச்சனை?
கடந்த 21ம் தேதி இந்த யூடியூப் தளத்திலிருந்து Fact check வீடியோ வெளியாகியிருந்தது. அதில் இரண்டு விஷயங்கள் விளக்கப்பட்டிருந்தன. ஒன்று வீட்டில் வைத்தே குழந்தைகளுக்கு கல்வி சொல்லித் தருவது பற்றி நித்தியானந்தா பேசியிருந்த வீடியோ. அதில், குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். வீட்டில் வைத்தே மந்திரங்களை சொல்லி வளர்க்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
நித்தியானந்தா வீடியோ
இந்த சமூகத்திற்கு ஒரு மருத்துவர், பொறியாளர், தொழில்நுட்பம் தெரிந்தவர் வேண்டும் எனில், வீட்டிலிருந்தே அவர்களை எப்படி உருவாக்க முடியும்? நீங்கள் நல்ல செட்டில் ஆகிவிட்டீர்கள்.. சாமானிய குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் இப்போதுதான் கல்வி பயின்று முன்னேறுகிறார்கள். அவர்களை படிக்க வேண்டாம் என ஏன் சொல்கிறீர்கள் என் MR.GK கேள்வி எழுப்பியிருந்தார்.

அண்ணாமலை வீடியோ
இரண்டாவது பார்ட்டில், அண்ணாமலை விரதம் குறித்து பேசியிருந்தது விளக்கப்பட்டிருந்தது. அதாவது, விரதம் இருந்தால் கேன்சர் செல்கள் அழிந்துவிடும். எனவே விரதம் இருக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு அறிவியலுக்கு புறம்பாக இருந்ததாக கூறியிருந்த MR.GK.. அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார். அதாவது கேன்சர் செல்கள் உடலில் உள்ள சத்துக்களை அதிக அளவில் எடுத்துக்கொண்டு வளர்கிறது. மற்ற செல்களின் வளர்ச்சியை காட்டிலும் கேன்சர் செல்கள் அதிக எனர்ஜியை எடுத்துக்கொள்கிறது.
விரதம் இருந்தால் கேன்சர் குணமாகுமா?
அப்படியெனில், எனர்ஜியை கட் செய்துவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடுமே! விரதம் இருந்து கேன்சர் செல்களை அழித்துவிடலாம் என்று தோன்றலாம். ஆனால், எனர்ஜி கிடைக்கவில்லை என்றாலும், அது நமது தசையிலிருந்து அமிலத்தை எடுத்து அதை எனர்ஜியாக கன்வெர்ட் செய்த வளர்கிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, விரதம் இருப்பது கேன்சரை குணப்படுத்தாது என MR.GK கூறியிருந்தார்.

கருத்துரிமை
இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருந்தது. இப்படி இருக்கையில் திடீரென வீடியோ யூடியூபிலிருந்து நீக்கப்பட்டது. இது குறித்து தனது x பக்கத்தில், "சாமியார் தரப்பில் இருந்து வந்த கடும் அழுத்தம் காரணமாக, கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ESP வீடியோ தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வாழ்க ஜனநாயகம், வாழ்க கருத்துரிமை" என MR.GK பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications