YouTuber Irfan: குழந்தை பாலினம் வெளியிட்ட சர்ச்சை.. இர்பானுக்கு மீண்டும் சட்ட சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல யூடியூபரான இர்பான் தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், யூடியூபர் இர்பானுக்கு சம்மன் அனுப்ப தமிழக மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், அவரை நேரில் அழைத்து விசாரிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பிறப்பதற்கு முன்பே கண்டறிவதும் அதை அறிவிப்பதும் சட்டவிரோதமானது. பெண் சிசுக் கொலை உள்ளிட்ட பாலின அடிப்படையிலான குற்றங்களைத் தடுக்கும் வகையில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரபல யூடியூபரான இர்பான், தனது கர்ப்பிணி மனைவியுடன் 2024 ஆம் ஆண்டு துபாய்க்குச் சென்று, பிறக்கவிருந்த குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

YouTuber Irfan

இதைத்தொடர்ந்து, அவருக்கு 2024 ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பாலினத் தேர்வு தடுப்புச் சட்ட விதிகளை மீறியதாக இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, 2024 மே 22 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகளை இர்பான் நேரில் சந்தித்து விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார். அதோடு மட்டுமல்லாமல் மன்னிப்பு கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் ஊரக நலப்பணிகள் முன்னாள் இயக்குநர் ராஜமூர்த்தி தலைமையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மன்னிப்பு கடிதம் இர்பானிடமிருந்து வாங்கப்பட்டதோடு, வீடியோவும் டெலிட் செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டதால் மட்டும் வழக்கை முடித்து வைத்தது சட்டரீதியாக ஏற்க முடியாது எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, இர்பானை மீண்டும் நேரில் அழைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கும் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, யூடியூபர் இர்பானை மீண்டும் விசாரணைக்கு அழைப்பது குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+